அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ள சென்டர் மீடியனை அகற்ற நெடுஞ்சாலைத் துறைக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை மெயின் ரோட்டில் மாளியக்காடு முக்கத்தில் மகிழங்கோட்டை ராஜாமடம் கிராமத்திற்கு தார்சாலை செல்கிறது. அந்த இடத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்காக நெடுஞ்சாலை துறை சார்பில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை ஏற்கனவே குறுகலாக உள்ளது. இதற்கிடையே சாலையின் குறுக்கே சென்டர் மீடியன் அமைத்துள்ளதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தடுப்புச்சுவர் அமைந்துள்ள இடத்தில் சாலையோரம் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் தூத்துக்குடி துறைமுக பகுதியிலிருந்து கண்டெய்னர்கள் மற்றும் பெரிய மரங்களை ஏற்றி வரும் லாரிகள் இவ்வழியாக செல்லும்போது வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். அப்போது தடுப்பு சுவரில் வாகனங்கள் மோதி விபத்துக்களும் நிகழ்ந்து வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மேலும் விபத்துகள் நடக்காமல் இருக்க மேற்கண்ட இடத்தில் உள்ள சென்டர் மீடியனை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தொக்காலிக்காடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் பிச்சைமுத்து கூறுகையில், தடுப்பு சுவர் இல்லாத நேரத்தில் எந்த விபத்துகளும் நடக்கவில்லை. இந்த தடுப்பு சுவர் அமைந்துள்ள இடம் மிகவும் குறுகிய பாதையாக உள்ளதால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்கு உள்ளாகின்றனர். கடந்த வருடம் ஒரு தனியார் பேருந்து இந்த தடுப்பு சுவரில் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். 20க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். எனவே நெடுஞ்சாலைத்துறை உடன் தடுப்பு சுவரை அகற்ற வேண்டும் என்றார்.
courtesy: dinakaran


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது