ஜமாலும் கமாலும்

2
ஜமால்: வாங்க கமாலு, ரெண்டு நாளா ஆளையே காணோம் ...

கமால்: அது ஒன்னும் இல்ல, என் ராத்தா மொவன் +2 முடிச்சுட்டான், அதான் அவன காலேஜுல அட்மிஷன் போட போனேன்

ஜமால்: அப்புடியா, உன் மருமோவன் என்ன மார்க்கு எடுத்தான்?

கமால்: கம்மீதான் ஜமாலு, 816 மார்க்கு தான்

ஜமால்: இதுவே கம்மி மார்க்குன்னு சொல்றியே அப்போ என் மச்சான் 610 மார்க்தான் வாங்குனான், உன் மருமொவன என்ன படிக்க வைக்கபோறீங்க

கமால்: எஞ்சினியரிங் படிக்க சொல்லி ராத்தா சொன்னாங்க, ஆனா 816 மார்க்குக்கு சென்னைல  உள்ள ஒரு காலேஜுல இரண்டரை லட்சம் டொனேசன் கேட்குறாங்க அதான் போயிட்டு காலேஜுல சேக்காம வந்துட்டேன்.

ஜமால்: அப்புடியா இப்பதான் எஞ்சினியரிங் தான் வேல்யூ இல்லாம போச்சே, அப்புறம் என்ன இதுக்கு இவ்வளவு காசு கேட்குறாங்க.

கமால்: ஆமாம், வீட்டுலயும் சொல்லிட்டாங்க, இவ்வளவு செலவழிச்சு எஞ்சினியரிங் வேணாம்னு, என் மருமகனும் இன்ட்ரெஸ்ட் இல்லாமதான் இருக்கான்.

ஜமால்: அதுவும் நல்லதுதான், நீ அவன நாம் ஊர் காலேஜுல சேர்த்து விட்டுட்டு, அப்புடியே நல்ல மதரஸா வுல ஹிப்லு பாடத்துல சேர்த்து விடு, இம்மை ம்றுமை இரண்டுலையும் பயன் கிடைக்கும்.

கமால்: அதுவும் நல்ல ஐடியா தான் இப்பவே போய் ராத்தா ட சொல்றேன், சரியா 

ஜமால்: நல்லது, சரி தேர்தல் முடிவுலாம் பாத்தியா,

கமால்: ம்ம்ம், பாத்தேன் தலை சுத்திருச்சு, தேர்தல் ரிசல்ட பார்த்தா நம்பவே முடியல 

ஜமால்: எனக்கும் அப்புடி தான் இருந்துச்சு, எது எப்புடியோ அரசியல் வாதிங்க கேட்டத மக்கள் கொடுத்துட்டாங்க, மக்கள் கேட்டத அரசியல் வாதிங்க கொடுப்பாங்க்களான்னு பாப்போம்......

Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பண்ணா மீனும், கெலக்கமீனும் பேசினார்கள் போல் இருக்கு, பண்ணா மீது =நடுத்தெரு, கெலக்கமீனு = புதுமனைத் தெரு.

    ReplyDelete
  2. Both middle and puthumanai st are panna meenu thanda. Ithula kila meenu yengke irunthu vanthathu. Aakirath thinking eppothum vullathil iruppavarin padaipatral ithu. Anaivarum Paratta vendum.vendum.

    ReplyDelete
Post a Comment