என்ன படிக்கலாம்: பொறியியல் - ENGINEERING

1
+2 மாணவர்கள் பொதுத்தேர்வு முடித்து 1 மாதத்திற்க்கும் மேல் ஆகிவிட்டது. தேர்வு முடிவுகள் வரும் 9ம் தேதி வெளியாகவுள்ளது. 14 வருடம் மாணவர்களின் பள்ளிப்படிப்பின் பயன் 9ம் தேதி தெரியவுள்ளது. பெற்றோர்கள் பல  கனவுகளுடன் தங்கள் பிள்ளைகளை இந்த படிப்பில் சேர்க்க வெண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். மாணவர்களும் தான் இந்த படிப்பில் தான் சேர வேண்டும் என்னும் கனவில் இருப்பீர்கள்.  பெற்றோர்களின் ஆலோசனையை கேட்டு, மாணவர்கள் தங்களுக்கு பிடித்த பாட பாட்பிரிவை தேர்ந்தெடுத்து படிக்கவும்


அந்த வகையில் எந்தெந்த படிப்பு எப்படிப்பட்டது, எந்த பிரிவு மாணவர்கள் அந்த படிப்பை படிக்கலாம் என்று இனி வரும் நாட்களில் அதிரை பிறையில் பார்ப்போம்

அந்த வகையில் இன்று பொறியியல் கல்வியை பற்றியும் அதன் பிரிவுகளைப் பற்றியும் பார்ப்போம்.

பொறியியல் - ENGINEERING


ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் - பி..,
விமானங்களை வடிவமைப்பதிலும் பராமரிப்பதிலும் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்த பொறியாளர்களின் பங்கு முக்கியமானது. செயற்கைக்கோள், ஏவுகணை, ராக்கெட்...என இப்பாடப்பிரிவின் எல்லைகள் விரிவடைந்து வருவதால் இத்துறை ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்கள், விமான வடிவமைப்பு நிறுவனங்கள், விண்வெளி ஆய்வுத் துறை, பாதுகாப்புத் துறை போன்ற பல்வேறு துறைகளில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டு. தகவல் தொழில்நுட்பத் துறையிலும் வேலை கிடைக்கும். நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.

ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - பி..,
இன்ஜினியரிங் துறையில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்று ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறையாகும். ஆட்டோ மொபைல்களை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல், மேம்படுத்துதல், பராமரித்தல் ஆகியவற்றை இத்துறை உள்ளடக்கியது. இத்துறையின் கீழ் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களை காண்போம். * அண்ணா பல்கலைக்கழகம், சென்னை இக்கல்வி நிறுவனத்தில் நான்காண்டு பி.., (முழுநேரம்) மற்றும் பி.டெக்., ( பகுதி நேரம்) பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. விபரங்களுக்கு தீதீதீ.ச்ணணச்தணடிதி.ஞுஞீத * .ஆர்.டி.டி.,( சாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்), ஈரோடு இங்கு நான்காண்டு கால அளவு கொண்ட பி.., பிரிவில் இந்த படிப்பு அளிக்கப்படுகிறதுசென்னை  எம்..டி., , ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங்கில் முழுநேர மற்றும் பகுதிநேர பி.டெக்., படிப்புகள் இங்கு கற்றுத்தரப்படுகின்றன. இந்துஸ்தான் பல்கலைக்கழகம், சென்னை இக்கல்வி நிறுவனம் நான்காண்டு பி.., படிப்பை வழங்குகிறது. வேலூர் இக்கல்வி நிறுவனம் .ஆர்...,யுடன் இணைந்து முதுநிலை பிரிவில் எம்.டெக்., படிப்பை வழங்குகிறது.



பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் - பி..,
மருத்துவ சாதனங்களை உருவாக்குதிலும் அவை தொடர்ந்து சரிவர செயல்படுகிறதா என்பதைக கவனிப்பதிலும் பயோ மெடிக்கல் இன்ஜினியர்களின் பங்கு முக்கியமானது. உயிரியலும் மருத்துவமும் இன்ஜினியரிங்குடன் இணைந்த துறை பயோ மெடிக்கல் இன்ஜினியரிங். மருத்துவக் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களிலும் அதற்கான சாப்ட்வேர்களை உருவாக்கும் நிறுவனங்களிலும் இப்படிப்புப் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். வெளிநாடுகளில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் உள்ள நவீன மருத்துவக் கருவிகளைப் பராமரிப்பதற்காக பயோ மெடிக்கல் இன்ஜினியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். செல்லுலார், டிஷ்யூ இன்ஜினியரிங் துறை ஆய்வு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புக் கிடைக்கும். இத்துறை மாணவர்களுக்கு சாப்ட்வேர் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. நான்கு ஆண்டு இளநிலை இன்ஜினியரிங் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்கலாம்.

சிவில் இன்ஜினியரிங் - பி..
பொறியியல் துறையின் முன்னோடிப் படிப்பு சிவில் இன்ஜினியரிங். கட்டடங்கள், சாலைகள், கால்வாய்கள், அணைகள், பாலங்கள், நீர்த்தேக்கங்கள், வடிகால்கள், துறைமுகங்கள், விமானத் தளங்கள், ரயில் போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை உருவாக்குவதில் சிவில் இன்ஜினியர்களின் பங்கு முக்கியமானது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியது இருப்பதால் சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான தேவை என்பது தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை, ரயில்வே துறை என்று பெரும்பாலும் அரசுப் பணிகளையே சிவில் இன்ஜினியர்கள் நம்பி இருக்க வேண்டியதிருந்தது. இப்போது திறமையான சிவில் இன்ஜினியர்களுக்கு தனியார் கட்டுமான தொழில் நிறுவனங்களிலும் வேலை கிடைத்து வருகிறது. சில ஆண்டுகள் அனுபவத்திற்குப் பிறகு தனியே தொழில் நிறுவனங்களைத் தொடங்கி சிவில் என்ஜினியரிங் துறையில் வெற்றிகரமாக செயல்படுபவர்களும் இருக்கிறார்கள். நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.


கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் - பி.
 நாட்டில் உள்ள இளைஞர்களை ஈர்க்கும் முக்கியப் படிப்பு கம்ப்யூட்டர் அறிவியல் இன்ஜினியரிங். படித்து முடித்த திறமையாளர்களுக்கு கை நிறைய ஊதியத்துடன் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் படித்து முடிக்கும் முன்பே வேலை. தகவல் தொழில்நுட்பத் துறையின் பிரமாண்டமான வளர்ச்சி இத்துறையில் படிக்கும் மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. எனவே, இன்ஜினியரிங் படிப்புகளைப் படிக்க நினைக்கும் மாணவர் கூட்டத்தின் முக்கிய விருப்பம் கம்ப்யூட்டர் அறிவியல் என்றாகிவிட்டது. கம்ப்யூட்டர் ஹார்ட்வேர், புரோகிராமிங் மொழிகள், வடிவமைப்பு, கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிங், கம்ப்யூட்டர் வரைவியல், கம்ப்யூட்டர் பொறியியல், டிஜிட்டல் சிஸ்டம்ஸ் போன்ற கம்ப்யூட்டர் துறைக்குத் தேவையான முக்கியப் பாடங்கள் இந்த மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன. அதாவது கம்ப்யூட்டர் வடிவமைப்பு, உருவாக்கம், செயல்பாடுகள் ஆகிய துறைகளில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கம்ப்யூட்டர், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களில் வேலைவாய்ப்புக் கிடைக்கும். நான்கு ஆண்டு இளநிலை பொறியியல் பட்டப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.

எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - பி..
 எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மின் உற்பத்தி அமைப்புகள், மின் ஆற்றல் பகிர்வு உள்பட எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் தொடர்பான பாடப்பிரிவுகளைக் கொண்டது இப்படிப்பு. கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் ஆகிய படிப்புகளை அடுத்து மாணவர்களால் அதிகமாக விரும்பப்படும் படிப்பு இது. மின் துறை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தொழில் நிறுவனங்களிலும் தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களிலும் இப்படிப்புகளைப் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.


எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் - பி..
  கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பதை விட, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பாடப்பிரிவை எடுத்துப் படிப்பதால் தங்களது வேலைவாய்ப்புத் தளத்தை விரிவுபடுத்திக் கொள்ளலாம் என்ற நோக்கில் இப்படிப்பை பல மாணவர்கள் தங்களது முதல் விருப்பமாகக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அண்மைக் காலத்தில் எந்தப் இன்ஜினியரிங் கல்லூரியாக இருந்தாலும் இப்படிப்பில் சேருவதில்தான் மாணவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது என்பது வெளிப்படை. எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரான் டிவைசஸ், சிப் டிசைன், சாப்ட்வேர் புரோகிராமிங், டிஜிட்டல் சிக்னல் புராசசிங், கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன், டிரான்ஸ்மிஷன் லைன்ஸ், நெட் ஒர்க்கிங், ஆப்டிக்கல் கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மைக்ரோ புராசசர், மைக்ரோவேவ் இன்ஜினியரிங்...இப்படி பல்வேறு பாடங்கள் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன. டெலி கம்யூனிகேஷன் மற்றும் கம்யூனிகேஷன் தொழில் நிறுவனங்கள், சாப்ட்வேர், ஹார்டுவேர் நிறுவனங்கள், மைக்ரோபுராசசர் நிறுவனங்கள், மின்னணு உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புக் கிடைக்கும். நான்கு ஆண்டு இளநிலை இன்ஜினியரிங் பட்டப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன. கம்ப்யூட்டர் தொடர்பான துறைகளிலும் முதுநிலைப் படிப்புகளைப் படிக்கலாம்.

மரைன் இன்ஜினியரிங் - பி..,
 பயணிகளுக்கான கப்பல்கள், சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் ஆகியவற்றின் இயக்கம் குறித்த பல்வேறு பயிற்சிகளை உள்ளடக்கியது இப்படிப்பு. கப்பலில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சார்ந்த பல்வேறு சாதனங்களை இயக்கவும் பழுது பார்க்கவும் கற்றுத்தரப்படும். இப்பாடப்பிரிவு மாணவர்களுக்குக் கப்பலில் நேர்முகப் பயிற்சியும் அளிக்கப்படும். இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான உடல் தகுதியும் உரிய பார்வைத் திறனும் இருக்க வேண்டும். நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - பி..,
 இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளில் முக்கியமான துறை மெக்கானிக்கல் இன்ஜினியரிங். தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திர சாதனங்கள், பொருள் உற்பத்தி முறைகள், இன்ஜினியரிங் வடிவமைப்பு, கம்ப்யூட்டர் பயன்பாடு போன்றவற்றை உள்ளடக்கியது ஆட்டோமொபைல் நிறுவனங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக் கிடைக்கும். தற்போது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு கூட, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது. அரசுத் துறை நிறுவனங்களில் மட்டுமல்லாமல், தனியார் துறை நிறுவனங்களிலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.

மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் - பி..,
 மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் எலக்ட்ரானிக்ஸ் துறையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளின் இணைவுதான் மெக்கட்ரானிக்ஸ். ஆட்டோமொபைல் போன்ற இயந்திரவியல் தொழில் துறைகளில் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களில் பயன்பாடு அதிகரித்து வருகிறது. உற்பத்தித் தொழில் நிறுவனங்களிலும் ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்களில் மட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் இப்படிப்புப் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. வளர்ந்து வரும் புதிய துறை மெக்கட்ரானிக்ஸ். இத்துறையில் படித்த திறமையான மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.

இவ்வளவு படிப்புகளிலும் இத்தனை வாய்ப்புகள் இருந்தாலும் வருடத்திற்க்கு லட்சக்கனக்கான மாணவர்கள் டிகிரி முடித்து வெளியேறுவதால் பல மாணவர்களின் பொறியியல் வேலை கனவு நிறைவேறாமல் தான் உள்ளது. எதுவாக இருந்தாலும் பிடித்த படிப்பை தேர்ந்தெடுத்து திறம்பட செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

நாளை கலை (ARTS) பிரிவு படிப்புகள் பற்றி பார்ப்போம்.

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. தக்க நேரத்தில் பதிவிடப்பட்ட பதிவு.

    ReplyDelete
Post a Comment