பாஸ்போர்ட்டில் படங்கள் வரைந்த மகன்- நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தந்தை (video)

0


பீஜிங்: மக்களே உங்கள் பாஸ்போர்டை குழந்தைகளுக்கு எட்டாய இடத்தில் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள், அல்லது சீன நபரைப்போல அயல்நாட்டில் சிக்கி சீரழிய வேண்டியிருக்கும். சீனநாட்டை சேர்ந்த தந்தையும், அவரது நான்கு வயது மகனும் தென்கொரியாவுக்கு சென்றிருந்தனர். விமானத்தில் செல்லும்போது, பிரயாண களைப்பு தெரியாமல் இருக்க சிறுவன் பேனாவை எடுத்து படம் வரைந்து கொண்டே வந்துள்ளான் அச்சிறுவன். ஆனால் அவன் படம் வரைந்தது வெற்று காகிகத்தில் கிடையாது, தந்தையின் பாஸ்போர்ட்டில். இது தெரியாத தந்தை தென்கொரிய குடியுரிமை அதிகாரிகளிடம் பாஸ்போர்ட்டை காட்டியபோது அதிர்ச்சியடைந்தார். தந்தையின் உருவமே தெரியாத அளவுக்கு கண்டபடி படம் வரைந்து வைத்துள்ளான் சிறுவன். பாதுகாப்பு காரணங்களால் சிறுவனையும், தந்தையையும் சீனாவுக்கு திருப்பியனுப்ப முடியாத நிலையில் தென்கொரிய அதிகாரிகள் உள்ளனர். இந்த சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர்கள், பாஸ்போர்ட்டில் இருப்பது, அவர்தான் என்று கூறியும்கூட, தென்கொரிய அதிகாரிகள் ஏற்பதாக இல்லை. பாஸ்போர்ட்டில் சிறுவன் வரைந்த அழகான ஓவியத்தை காண்பிக்கும் வீடியோ இணைப்பு இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=pMxt0qhMorc


Editor கருத்து :
பயபுள்ள வருங்காலத்துல `Piccaso` மாதிரி நல்ல ஓவியரா வருவான் போல.


          

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)