உணவுப் பாதை –உடலியல் மற்றும் உடற்கூறுப் பார்வை
நாம் உண்ணும் உணவு நமது உடலின் உள் உறுப்புகளின் பல பகுதிகளில் செரிமானமாகிறது. வாயில் இரைப்பையில், குடலில் உணவு சீரணமாகிறது. உணவைச் சீரணிக்கும் உறுப்புகளில் இரைப்பை தான் பெரிது. இது மனிதன் உடல் வாகுக்குத் தகுந்தபடி பெரிதாகவோ சிரிதாகவோ இருக்கும். இதன் கொள்ளவு 1000.மி.லிட்டர்.
தொண்டையில் இருந்து கீழே தொடக்கத்தில் இணைகிறது.இவ்வாறு
இணையும் இடத்தில் பருத்து இருக்கும் .இரைப்பை,பின்னர் வடிவத்தில் குறுகி,முன்சிறு குடலுடன்
சேர்கிறது.இந்த இடம் பைலோரஸ் வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக இரைப்பை வயிற்றின் இடப்புறம் உள்ள உதர விதானத்திற்குக்
கீழே அமைந்திருக்கும். உதரவிதானம் என்பது வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையே உள்ள தசை.
இந்த உதரவிதானம் ஒரு தடுப்புச்சுவர் போல நுரையீரல், இதயம் ஆகியவற்றிலிருந்து இரைப்பையைப்
பிரித்து வைத்து அரண்போல் அமைந்துள்ளது.
இரைப்பை உடலின் எங்கே இருக்கிறது என்பதை ஓரளவு சுருக்கமாகத்
தெரிந்துக்கொள்ள வேண்டும். என்பதற்காகவே மேலே ஓரளவு கூறப்பட்டுள்ளது.
இரைப்பையின் சுவர் பல விதமான தசைகளால் ஆனது. இதில் நேரான
தசைகள் உண்டு. சில பகுதிகள் வளைவான தசைகளால் ஆனவை. மற்றவை, குறுக்கு நிலையில் உள்ள
தசைகள்.
குறுக்குத் தசைகள் இரைப்பையின் தொடக்கத்தில் உள்ளன. வளைவான
தசைகள் பைலோரசில் இருக்கின்றன. இதன் காரணமாகப் பைலோரசஸ் தடித்துக்காணபடுகிறது.
இரைப்பையின் உட்புறத்தில் ஒரு சளிப்படலம் உள்ளது.இப்படலம் தடித்தும், மேடு பள்ளமாகவும்,
வளைவு வளைவாகவும், சிறு சிறு அறைகளாகவும் தேனடை போலக்காணப்படும். இந்தச் சளிப் படலத்தில்
தான் பெப்டிக் செல்களும் உள்ளன.
இந்த பெப்டிக் செல் ஒருவகை ஹார்மோனை உற்பத்திசெய்கிறது.
அந்த ஹார்மோனின் பெயர் பெப்சின் அதே போல பைரைட்டல் செல் ஓர் அமிலத்தை நமது வயிற்றுக்கொள்ளே உற்பத்தி செய்கிறது. அந்த அமிலம்
தான் நாம் அறிந்த ஹைடிரோ குளோரிக் அமிலம்(Hydro
Chloric Acid)


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது