அதிரையில் மரைக்கா குளம் அருகில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் சரி செய்யும் பணி தீவிரம்

0

அதிரை மரைக்கா குளம் அருகே உள்ள ட்ராண்ஸ்பார்மரில் கடந்த பல நாட்களாக அடிக்கடி சிக்கல்கள் மின் பிரச்சனைகளும் நிலவி வந்தது. இதனை அடுத்து பலர் அதிரை மின்வாரிய அலுவலர் அவர்களிடமும் வார்டு கவுன்சிலரிடமும் புகார் அளித்தவாறு இருந்தனர். மேலும் அதில் இருந்து செல்லும் மின் தாங்கி வயர்களும் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்தது.

இந்நிலையில் அதிரையில் நேற்று மாலை வீசிய பலத்த காற்றில் இந்த ட்ரான்பார்மரில் இருந்து செல்லும் வயர்அள் அறுந்து விழுந்தன.

இதனை அடுத்து இன்று இன்று காலை 9 மணி முதல் அதிரை மின்வாரிய ஊழியர்கள் 4 பேர் தற்பொழுது இரவு வரை முழு மூச்சுடன் அங்கு உள்ள பழுதுகளை சரி செய்து வருகின்றனர். இதற்க்கு முன்னதாக பூங்காவை ஒட்டி மண்டிக்கிடந்த கருவேல மரங்கள் வெட்டப்பட்டது. 

இது குறித்து ஒரு மின்வாரிய ஊழியரிடம் கேட்டதற்க்கு "இன்று காலையில் இருந்து இந்த ட்ராஸ்பார்மரில் உள்ள பழுதுகளை நீக்கி வருகிறோம். இதனால் இதை சுற்றியுள்ள மேலத்தெரு, நெசவுத்தெரு, புதுமனைத்தெரு ஆகிய பகுதிகளில் இன்று காலையி இருந்து மின்சாரம் அடிக்கடி தடை செய்யப்பட்டது, இன்று ஒரு நாள் மக்கள் பொருமை காக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்" என்றார்






Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)