முத்துப்பேட்டையில் சிறை செல்வதற்காகவே பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர்

0

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காட்டை சேர்ந்த ஜெயராமன் மகன் பிரவீன்(33).

கடந்த சில நாட்களாக முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று தான் மன
உளைச்சலில் இருப்பதாகவும், எனவே தன்னை கைது  செய்து சிறையில் அடைக்கும்படியும் கூறி வந்தார்.

வழக்கு எதுவும் இல்லாமல் கைது செய்ய முடியாது என போலீசார் மறுத்து உள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை பிரவீன் முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்திற்கு வந்தார்.

அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து வந்து நின்ற தனியார் பஸ்சின் கண்ணாடிகளை கல் வீசி உடைத்தார் பயணிகள் அலறியடித்து ஓடினர். ஒரு சிலர் தைரியத்தை வரவழைத்து கொண்டு பிரவீனை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவரை முத்துப்பேட்டை போலீஸ்
நிலையத்தில் ஒப்படைத்தனர். எஸ்.ஐ வெர்ஜினியா பிரவீனை கைது செய்தார். அவர் ஏற்கனவே இது போல் 3 முறை பஸ்களின் கண்ணாடிகளை உடைத்தது குறிப்பிடத்தக்கது.

courtesy: muthupet news
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)