SDPI நடத்திய இரயில் மறியல் போராட்டம் (படங்கள் இணைப்பு)

0
காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் எரிவாயு திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும்! தஞ்சையில் எஸ்.டி.பி.ஐ கட்சி இரயில் மறியல் போராட்டம்:- போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது!


காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கும்பகோணத்தில் (25/06/2014) காலை 11 மணியளவில் இரயில் மறியல் போராட்டத்திற்கு முற்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் அப்துல் சத்தார் தலைமையில் நடைபெற்ற இரயில் மறியல் போராட்டத்தில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் கண்டன உரையாற்றினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் நாகை மாவட்ட தலைவர் தாஜூதீன், திருவாரூர் மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப், தஞ்சை வடக்கு மாவட்ட முன்னாள் நிர்வாகிகள் இஸ்ஹாக், ஆவூர் அன்சாரி, தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இலியாஸ் மற்றும் எஸ்.டி.டி.யூ மாநில தலைவர் ஃபாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மீத்தேன் எதிர்ப்பு இயக்கத்தினர், பொதுமக்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மீத்தேன் எரிவாயு திட்டத்தை குறித்து கண்டன உரையாற்றிய மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன்;

மீத்தேன் எரிவாயு திட்டத்தால் பல்வேறு அபாயங்கள் உள்ளன. 1500 அடி ஆழத்திற்கு மேல் ஆயிரக்கணக்கான துளைகள் இடப்பட்டு குழாய்கள் பதித்து, நிலத்தடி நீரை வெளியேற்றுவதால் குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் கிடைக்காமல் காவிரி படுகை பாலைவனமாக மாறும், சென்னை முதல் ராமேஸ்வரம் வரை கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

பூமிக்கு அடியில் உள்ள நிலக்கரி பாளங்களை அழுத்தி விரிசல் உருவாக்குவதற்காக வேதிப்பொருள்கள் அடங்கிய கலவை குழாய் வழியாக அடி ஆழத்துக்குச் செலுத்தப்படும். இதில் வெறும் 30 சதவிகிதம் மட்டுமே திரும்ப வெளியில் எடுக்கப்படும். 70 சதவிகிதம் நிலத்துக்குள்ளேயே தங்கி விடும். அது நிரந்தரமாக மண்ணை விஷமாக்கி விடும். இந்த ரசாயனக் கழிவு குடிநீரில் கலந்தால், புற்றுநோய், தைராய்டு உள்ளிட்ட பல நோய்கள் உருவாகக்கூடும்.

மேலும் மீத்தேனை எடுத்துச் செல்ல குழாய்கள் பதிப்பதற்காக ஏராளமான நிலங்கள் கையகப்படுத்தப்படும். இதனால் விவசாயத்தையே வாழ்க்கையாகக் கொண்ட லட்சக்கணக்கான குடும்பங்கள் வேறு தொழில்நாடி இடம்பெயர நேரிடும். மொத்தத்தில் டெல்டாவின் பங்களிப்பான 36% உணவு உற்பத்தி பாதிக்கப்படும்.

எனவே மத்திய மாநில அரசுகள் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை எந்த நிபந்தனையுமின்றி முற்றிலுமாக நிறுத்திட வேண்டும். என உரையாற்றினார்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் மாவட்ட தலைவி தமிழினி மற்றும் மீத்தேன் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் இளங்கோ ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.



Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)