அல்சர் ஏற்படுவதற்கு காரணங்கள்
உண்ணும் உணவினை செரிக்கச் செய்வதற்கு அடிப்படையாய் விளங்கும் இரைப்பையில் சுரக்கும் அமிலம் சரியான அளவில் சுரந்தால் மட்டுமே அதனுடைய உதவி சிறப்பாக அமையும் அதில் மாறுபாடுகள் தோன்றும் பட்சத்தில் இரைப்பையில் புண் ஏற்படுவதற்கு அதுவே காரணமாகிவிடும்.
இரைப்பையில் ஒருவகை கோழை உற்ப்பத்தியாகின்றது.இது ''வேகஸ்''எனப்படும் நரம்பின் தூண்டுதலால் ஏற்படுகின்றது.அமிலத்தின் காரணமாக புண் ஏற்படாதவாறு தடுப்பதும் இக்கோழைப்படலம் தான். ஆனால் பித்தனீர் முன் சிறுகுடலிலிருந்து இரைப்பைக்குள் செல்லும் நிலை ஏற்பட்டால் மேற்க்கண்ட கோழைப்படலம் தாக்கப்படுகின்றது. ஆகவே இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்கும் போது வேகஸ் நரம்பு தூண்டுதல் இல்லாத போதும் குடற்புன் ஏற்படுகிறது.
மேலும் ஆஸ்பிரின் மற்றும் வலிமாத்திரைகள் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிடுவதாலும் தொடர்ந்து மது அருந்துவதாலும் இந்த அல்சர் நோய் ஏற்படுகின்றது.
குடற்புண் எந்த வயதிலும் ஏற்படலாம் என்றாலும் அதிக அளவில் 25 முதல் 40
வயது உள்ளவர்களையே அதிகம் பாதிக்கின்றது.மேலும் குடற்புண் பெண்களை விட ஆண்களுக்குத்தான் அதிகமாக வரும்.பெண்களை விட ஆண்களுக்கு 30 சதவீதம் அதிகமாக வரும்.
கவலை,மகிழ்ச்சி,மனச்சோர்வு,வெட்கம்,டென்ஷன்,போன்றவையால் இரைப்பையில் சளிப்படலத்தை பாதிக்கும் காரணிகளாகும்.
அவசரகால உலகில் சரிவிகித உணவு இல்லாமல் போனதும் குடற்புண் ஏற்படகாரணமாகின்றது.
மாவுச்சத்துள்ள உணவை உண்டு புரச்சத்தினை உட்கொள்ளாமல் விட்டு விடுவதாலும் குடற்புண் உண்டாகலாம். எனவே தான் அரிசியை பிரதான உணவாகக்கொண்ட நாடுளான இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் குடற்புன் அதிகம் வருகின்றது.உணவை சரியான வேளைக்கு உண்ணாமல் காலந்தவறி உண்பதும் காரணமாகின்றது.
இரத்த வகையினை எடுத்துக்கொண்டால் O வகை உள்ளவர்களுக்கு A,B,AB.வகையினரை விட குடற்புண் வரும் நிலை அதிகம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாவுச்சத்துள்ள உணவை உண்டு புரச்சத்தினை உட்கொள்ளாமல் விட்டு விடுவதாலும் குடற்புண் உண்டாகலாம். எனவே தான் அரிசியை பிரதான உணவாகக்கொண்ட நாடுளான இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் குடற்புன் அதிகம் வருகின்றது.உணவை சரியான வேளைக்கு உண்ணாமல் காலந்தவறி உண்பதும் காரணமாகின்றது.
இரத்த வகையினை எடுத்துக்கொண்டால் O வகை உள்ளவர்களுக்கு A,B,AB.வகையினரை விட குடற்புண் வரும் நிலை அதிகம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது