தூங்குதலும் முதுகுவலியும்
தூங்கும் போது:
வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியைத் தூக்கத்தில் செலவிடுகிறோம்.அதாவது சாராசரி ஆயுட்காலம் 60 வருடம் எனக்கொண்டால் 20 வருடங்களைத் தூக்கத்திலேயே கழிக்கிறோம். ஆதலால்,நம் முதுகைத் தற்காத்துக்கொள்ள தூங்கும் போது நாம் படுத்திருக்கும் நிலை மற்றும் தூங்கப் பயன்படுத்தும் படுக்கை,தலையணை போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
தூங்கும்போது கவனிக்கவேண்டியவை:
1) தூங்கும் போது நம் முதுகின் இயல்பான வளைவுகள் பாதிக்காதவாறு இருத்தல் வேண்டும்.இயல்பான வளைவுகளைத் தக்க வைத்துக்கொள்ள இடுப்பிற்கு கீழே மெல்லிய தலையணை வைத்துக்கொள்ளலாம் அல்லது ஒரு முழங்காலைச் சிறிது மடக்கிப் பக்கவாட்டில் படுக்கலாம்.
2) மல்லாந்து அல்லது ஒரு பக்கமாகப்படுத்திருக்கும் போது கீழ் முதுகிற்குக் கீழே சுருட்டப்பட்ட பூத்துண்டு அல்லது மெல்லிய தலையணையை வைத்தல் நலம்.
3) ஒன்றுக்கு மேற்பட்ட தலையனைகளைப் பயன்படுத்திக் கொன்டே புத்தகம் படிப்பதோ அல்லது தொலைக்காட்சி பார்ப்பதோ கழுத்து எழும்பு தேய்மானத்திற்குக் காரணமாக அமையும்.
4) புத்தகம் படிப்பதற்கு ''V" வடிவம் உள்ள தலையணையை மடியில் வைத்துக் கொண்டு புத்தகம் படித்தால் கழுத்து வலியைத் தவிற்க்கலாம்.
5) பல ஆண்டிகளாக ஒரே மெத்தை மற்றும் தலையணைத் தொடர்ந்து உபயோகப்படுத்தினால் அதன் தன்மையை இழந்து முதுகினைச் சரியான படி தாங்காமல்,இடுப்பு அல்லது கழுத்து வலியை ஏற்படுத்தும். ஆதலால்,மெத்தை சரியாக உள்ளதா? எனப் பரிசோதித்து மாற்றுதல் நலம்.
6) தூங்கி எழுந்தும் உடலைத்தயார் செய்யும் பயிற்சிகளைச் (Warm-up Exercise) செய்த பின்னரே கடினமான வேலைகளைச் செய்ய வேண்டும்.
7) தூக்கமின்மை இடுப்பு மற்றும் கழுத்து வலியை அதிகமாக்கும்.
8) படுக்கை கடினமானதாக இருந்தால் உடலின் எடைப் பகிர்வு (Weight Distribution ) படுக்கையில் சமமாக இராது.இதனால் உடலின் சில பகுதிகள் மட்டுமே மொத்த உடலின் எடையையும் தாங்க வேண்டி வரும்.இதனால் அப்பகுதியில் வலி வர வாய்ப்பு உள்ளது.
9) படுக்கை மிகவும் மென்மையாக இருந்தால் முதுகின் இயல்பான வளைகளைப் பாதுகாக்க முடியாமற் போகும்.
10) நாள்பட்ட பயன்பட்டால், 1.5 செ.மீ . பிளைவுட்டை மெத்தைக்கு அடியில் வைப்பதன் மூலம் ஓரளவு சீரமைக்கலாம்.
11) மெத்தை கடினமாதாக இருந்தால் 5 செ.மீ.ஃபோம் (foam) அல்லது ரப்பர் ஷீட்டை மெத்தை மேல் போடுவதன் மூலம் இப்பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது