மல்லிபட்டினத்தில் விஷ வாயு தாக்கி துப்புறவுத் தொழிலாளர்கள் இருவர் பலி !!!

1

அதிராம்பட்டினம் அருகே மல்லிபட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு வரும் நோயாளிகள் பயன் பாட்டிற்காக 4 கழிவறைகள் உள்ளன. இந்நிலையில் செப்டிக்டேங்கிள் அடைப்பு ஏற்பட்டதால் அங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அந்த கழிவறைகளை பயன்படுத்த முடியாமல் அவதிபட்டு வந்தனர். இதையடுத்து ஆரம்ப சுகாதாரநிலையத்தில் உள்ளசெப்டிக்டேங்கை சுத்தம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். செப்டிக்டேங்க் சுத்தம் செய்ய மல்லிப்பட்டினம் ராமர்கோவில் தெருவை சேர்ந்த தங்கவேல் (வயது 58). என்பரை அழைத்தனர். அதன்பேரில் இரவு 11 மணியளவில் தங்கவேல், அவரது மகன் குமார் இவர்களுது உறவினர் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை   சித்தமல்லி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் ஆரம்பசுகாதார நிலையத்திற்கு சென்று அங்குள்ள செப்டிக்டேங்கை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அவரது உறவினர் சுரேஷ் எதிர்பாராத விதமாக செப்டிக்டேங்கிற்குள் விழுந்தார். அதைகண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் அவரை காப்பாற்றுவதற்காக செப்டிக்டேங்கிற்குள் இறங்கி சுரேசை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.ஆனால் செப்டிக்டேங்கிற்குள் இறங்கிய அவர்கள் 2 பேரையும் விஷவாயு தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தந்தை–மகன் இருவரும் மயங்கி விழுந்து பலியானார்கள். இவர்களது உடல் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது,
படுகாயம் அடைந்த சுரேசை மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து சேதுபாவசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தகவல் : கண்ணன் (அதிரை நியூஸ் வேல்ட்) 
Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. எவ்வளவோ தொழில் நுட்பத்தில் உயர்ந்த உலகில்,
    துப்புறவு தொழிலாளிகளின் உயிரின் மேல் அக்கரைகொண்டு ஒரு பாதுகாப்பு கவசம் கொடுக்காத மிக கேவலமான நிலையிலேயே நாம் இருக்குறோம். இது இந்தியாவின் சாபக்கேடு.

    ReplyDelete
Post a Comment