நமதூரை பொறுத்த வரை மொத்தம் 10 பள்ளிகூடங்கள் இருக்கிறது .இதில் மேல்நிலை பள்ளிகள் 3 உள்ளன .அதுமட்டும் இன்றி நமதூர் அருகே உள்ள லாரல் மேல்நிலை பள்ளியில் நமதூரை சேர்ந்த பல மாணவர்கள் படிக்கிறார்கள். நமதூரை பொறுத்த வரை கல்வியில் வளர்ச்சி நிறைந்த ஊர் என்றே சொல்லலாம் .சரி விஷயத்திற்கு வருவோம்.
சில தினங்களுக்கு முன்னால் கல்வி துறை சார்பாக ஒரு அறிவிப்பு வெளியிட்டார்கள் .அதில் பள்ளிகளுக்கு மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வர தமிழக பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது.
இதில் கவனக்குறைவுடன் செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து, எதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், அந்த பள்ளியின் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியரே அதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் செய்யும் தவறுக்கு பிறர் தண்டனை அனுபிவிக்க வேண்டும் என்றால் அது எந்த விதத்தில் நியாயம் . நமதூர் இளைஞர்கள் தற்போது பார்த்தோம் என்றால் பள்ளிக்கு அதிக மாணவர்கள் செல்வது பைக்கில் தான் . ஆனால் பைக்கில் செல்லும் மாணவர்கள் பைக்கை பள்ளி வளாகத்திற்குள் கொண்டு செல்வதில் இல்லை .அவர்கள் பள்ளி அருகில் உள்ள தெரு அல்லது நண்பர்கள் வீடு அருகில் நிறுத்தி விட்டு செல்கிறார்கள் .இதனால் பள்ளிக்கு பைக்கில் வரும் மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், அந்த பள்ளியின் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியரே அதற்கு எப்படி பொறுபேற்க முடியும்?
ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், அந்த பள்ளியின் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர் பொறுப்பா? அல்லது அந்த மாணவரின் பெற்றோர்கள் பொறுப்பா ?
"கண்டிப்பாக நாங்கள் சொல்கிறோம் பெற்றோர்கள் தான் பொறுப்பு" .காரணம் பைக்கில் செல்லும் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் பைக்கை கொண்டு செல்வதில் இல்லை. மாணவர்கள் பைக்கில் வருவது எப்படி ஆசிரியர்களுக்கு தெரியும் .சில மாணவர்கள் பைக்கில் வருவதை ஆசிரியர்கள் பார்த்தால் அவர்களை பள்ளிகளில் கண்டிக்கிறோம் என்று சில ஆசிரியர்கள் சொல்கிறார்கள் .
சற்று சிந்தித்து பாருங்கள் மாணவர்களை :
நீங்கள் பள்ளிக்கு பைக்கில் செல்வது பள்ளி முதல்வர்கோ அல்லது ஆசிரியர்கோ தெரியாது ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க படுவது நியாமா? நீங்கள் பைக்கில் வருவதை அறிந்தவர்கள் பெற்றோர்கள் மட்டுமே ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுக்கு நீங்கள் ஒற்று கொள்வீர்களா ?
சில பெற்றோர்கள் மன வேதனையுடன் சொல்கிறார்கள் :
என் மகன் பைக் வாங்கி தந்தாள் தான் பள்ளிக்கு செல்வேன் என்கிறான் .ஆகவே என்ன செய்வது என்று அறியாமல் நாங்கள் வாங்கி கொடுக்கிறோம் .என்று சில பெற்றோர்கள் உருக்கமாக சொல்கிறார்கள் .
எதற்கு ஓட்டுனர் உரிமம் பெறுவதுக்கு 18 வயது ஆக வேண்டும் என்று சொல்கிறார்கள் .அந்த வயதில் ஒரு நிதானம் வரும் என்று தான் .
நமதூரில் தற்போது வாரம் ஒரு விபத்தாவது நடந்து விடுகிறது . இதில் சில மாணவர்களுக்கும் விபத்துக்குள் ஆக நேரிடுகிறது.இதில் சில பேர் இறக்கவும் நேரிடுகிறது.இதனால் பல கஷ்டங்கள் மட்டும் நஷ்டங்கள் ஏற்படுகிறது .மாணவர்களே ! பள்ளி பருவத்திற்கு அடுத்து கல்லூரி வாழ்க்கை அடுத்து பணி செய்யும் இடம் இன்னும் சொல்லப் போனால் பல சந்தோசங்கள் உள்ளது .அதலாம் நாம் காண வேண்டாமா ?
சற்று சிந்தித்து முடிவெடுங்கள் !!!
இங்ஙனம்
அதிரை பிறை பதிவாளர் .
Advertisement
கண்டிப்பாக நான் சொல்கிரேம் பெற்றோர்கள் தான் பொறுப்பு
ReplyDeleteகண்டிப்பாக நான் சொல்கிரேம் பெற்றோர்கள் தான் பொறுப்பு
ReplyDeleteகண்டிப்பாக நான் சொல்கிரேம் பெற்றோர்கள் தான் பொறுப்பு
ReplyDelete