துபாய் தமிழர் சங்கமம் தொழிற் பிரிவின் துவக்க விழா

0

துபாய் தமிழர் சங்கமம் தொழிற் பிரிவின் துவக்க விழா

(தமிழகத்திலிருந்து துபாய் வந்து வேலை தேடும் தமிழ் சகோதரர்களுக்காக ஆண்டு வாடகைக்கு எடுக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட Villa துவக்க விழா )

08.08.2014 அன்று மாலை 6.30 மணியளவில் தெய்ரா துபாய் ETA Star House க்கு பின்புறம் உள்ள DUTAS தமிழ் Batchelor ரூம்ஸ் திறப்பு விழா துபாய் தமிழர் சங்கமத்தின் நிறுவனர் திரு. எக்ஸலன்ட் முருகேஷ் அவர்கள் தலைமையிலும் , ஒருங்கிணைப்பாளர் திரு பாளை அப்துல் கரீம் , கலை இலக்கிய பிரிவு செயலாளர் அதிரை திரு கவியன்பன் கலாம் , தொழிற் பிரிவின் மார்க்கெட்டிங் Head திரு.முஸ்தபா நூரணி , IT Head திரு. ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
வில்லா நுழைவு வாயிலை துபாய் தமிழர் சங்கமத்தின் நிறுவனரின் அன்னையார் திருமதி ராமாமிர்தத்தம்மாள் அவர்கள் திறந்து வைத்து வாழ்த்தினார்.
டாக்டர் சுமதி முருகேசன் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி வைத்தார் .
ரூம் "அ" வை நத்தம் திரு சாதிக் அவர்களும்,
ரூம் "ஆ" வை காயல்பட்டினம் மௌலான மௌலவி திரு.சுலைமான் ETA , மூன் டிவி ஆலிம் அவர்களும்
ரூம் "இ " வை சாகுல் ஹமீது (துபாய் ஹெல்த் ஆதாரிட்டி) அவர்களும்
ரூம் "ஈ " வை நெல்லை ஜிந்தா அவர்களும்
ரூம் "உ " வை திரு கவியன்பன் கலாம் அவர்களும்
ரூம் "ஊ " வை திரு பாளை அப்துல் கறீம் அவர்களும் திறந்து வைத்தனர்

Villa வை நமக்கு பிடித்து கொடுத்த திரு சாதிக் அவர்களுக்கு ஒரு கிராம் தங்க காசும் மிகசிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் DUTAS தொழிற் பிரிவின் மார்க்கெட்டிங் Head திரு.முஸ்தபா நூரணி அவர்களுக்கு ஒரு கிராம் தங்க காசும் அன்பளிப்பாக அளித்து கௌரவிக்கப்பட்டது.

DUTAS நிறுவனர் தமது தலைமை உரையில் DUTAS ன் அடுத்த வெற்றி திட்டமான "மில்லியன்ஸ் " ( துபாயில் 1 கேட்டரிங் யூனிட் 10 மினி ரெஸ்டரென்ட் ) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினர். அதற்க்கான Project Demo விரைவில் வெளியிட உள்ளதாகவும் உலக தமிழர்களை தொழிற் ரீதியாக ஒருங்கிணைக்க துபாய் தமிழர் சங்கமம் மேற்கொள்ளும் இந்த அறிய முயற்சிக்கு தமிழர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகோள் விடுத்தார்

விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் IT Head திரு. ராஜ்குமார் அவர்கள் நன்றி கூறினார் .
நன்றி,
துபாய் தமிழர் சங்கமம் தொழிற் ிரிவு 
மேலும் தற்போதய செய்திகள் பற்றி விபரம் அறிய கீழ்கண்ட link  ஐ சொடுக்கவும்
 

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)