குர்பானியின் விளக்கமும் சட்டங்களும் ! (பாகம் 2)

0
11. கூட்டாக குர்பானி கொடுக்கலாமா? எத்தனை நபர்கள் சேர்ந்து கொள்ளலாம்?
ஒட்டகத்திற்கும்,மாட்டுக்கும் 7 பேர் சேர்ந்து கூட்டாக கொர்பானி கொடுக்கலாம்.

ஹுதைபிய்யா என்னுமிடத்தில் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு ஒட்டகத்தை ஏழு பேர் சேர்ந்தும். இன்னும் ஒரு மாட்டிற்கு ஏழு பேர் கூட்டாக சேர்ந்து குர்பானி கொடுத்தோம், என்று ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்;- முஸ்லிம்.)

12. ஒரே ஒரு ஆட்டை ஒருவர் தமக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் குர்பானி கொடுக்கலாமா?

ஒருவர் தனக்காகவும் தன் குடும்பதிற்க்காகவும் ஒரு ஆட்டை குர்பானி கொடுக்கலாம்.

“நபி (ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி எப்படி கொடுக்க பட்டு வந்தது?

என்று அபூஅய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன்.

அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பதிற்க்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிட கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக்கூடிய நிலை ஏற்பட்டு விட்டது. என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் அதா பின் யாஸார்.

நூல்;- (திர்மிதி 1425, இப்னுமாஜா 3137, முஅத்தா 921)

ஒருவர் தமக்காகவும் தனது குடும்பதிரற்க்ககவும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கி விடும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.

“ஒன்றுக்கு மேல் குர்பானி கொடுக்க கூடாது என்பதற்கு தடையேதும் இல்லை.
“நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துள்ளார்கள்.
நூல் ;- (முஸ்லிம் புகாரி)

13. குர்பானி வீட்டில் கொடுக்கலாமா? எந்த இடத்தில் கொடுத்தால் நல்லது ?

வீட்டிலும் கொடுக்கலாம்.
“ஆயிஷா கத்தியை கொண்டு வா! அதை கல்லில் கூர்மையாக்கு!” என்னும் ஹதீஸிலிருந்தும் வீட்டில் வைத்தும் குர்பானி கொடுக்கலாம் என்பதை விளங்கலாம். (முஸ்லிம் 3637)
தொழுகை நடைபெறும் திறந்த வெளி மைதானத்தில் கொடுப்பது சிறந்தது.
இப்னு உமர் (ரலியல்லாஹு) அறிவிக்கிறார்கள், “முஸல்லா” என்னும் தொழுகை நடைபெறும் திறந்த வெளி மைதானத்தில் கொடுப்பது விரும்பத்தக்க செயலாகும்.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே செய்துள்ளார்கள்.
(நூல்;-புகாரி,அபூதாவூத்)

14. குர்பானி பிராணியை எப்படி அறுக்கலாம்? குர்பானி பிராணியை நிற்க வைத்து அறுக்கலாமா?

அறுக்கும் முறை:

1) ஆடு-மாடுகளை ஒருக்கணித்து படுக்க வைத்து அறுக்க வேண்டும். (முஸ்லிம்)

2) ஒட்டகங்களை நிற்க வைத்து அறுக்க வேண்டும். (முஸ்லிம்)

“குர்பானிக்காக நபி (ஸல்) அவர்கள்

கால்கள், வயிறு, முகம் ஆகியவை கருப்பாக அமைந்துள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்கி வருமாறு கட்டளை இட்டார்கள். அங்கி வரப்பட்டவுடன், ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள்.

பின்னர் அதை கல்லில் தீட்டி கூர்மையாக்குயாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு “ஆட்டை” பிடித்து படுக்க வைத்து அறுத்தார்கள்.

‘அறிவிப்பவர்; ஆயிஷா(ரலி) (நூல்;-முஸ்லிம் 3637)

குர்பானி பிரானி ஒட்டகமாக இருந்தால் (ஒரு காலை கட்டி)

“ மூன்று கால்களில் நிற்கவைத்து அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக, பிறகு அவை,

தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; 
(அல் குர்ஆன் 22;36)

மேலும் இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரு மனிதரிடத்தில் வந்தார்கள்.

அந்த மனிதர் ஒட்டகத்தை அறுப்பதற்காக படுக்க வைத்து கொண்டிருந்தார் இதை பார்த்த இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒட்டகத்தை எழுப்பி நிற்க வைத்து பலியிடுங்கள். இப்படி செய்வதே நபி வழி ஆகும் என்று கூறினார்கள்.

(நூல்; புகாரி, முஸ்லிம்)

15. கொர்பானி பிராணியை அறுக்கும் பொது என்ன சொல்ல வேண்டும்?
அவற்றை அறுக்கும் போது அல்ல்லாஹ்வின் திருப்பெயரை அவர்கள் கூறுவதற்காக குர்பானி (பலி)யை நாம் ஏற்படுத்தினோம்.

(அல்குர்ஆன்; 22:34)

“மேலும் குர்பானி பிராணியை அறுக்கும் பொது “பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு இதை முஹம்மதிடம் இருந்தும், முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும், முஹம்மதின் சமுதாயத்தாரிடம் இருந்தும் எற்றுகொள்வாயாக என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் ஆயிஷா (ரலி)

(நூல்; முஸ்லிம் 3637)

“மேலும் ஒரு அறிவிப்பில் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்றும் அல்லாஹும்ம ஹாதா மின்க வலக..

“பொருள்;- மிகப்பெரிய இறைவன் அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு...

இறைவா இந்தப்பிராணி உன்னிடத்திலிருந்தே இன்னும் உனக்கே உரியது. என்று கூறவேண்டும்.

{நூல் அபூதாவூத்}

ஒருவர் பலி பிராணியை அறுக்கும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்துவிட்டால். அந்தப் பிராணியை சாபிடும் போது பிஸ்மில்லாஹ் கூறிக்கொள்ள வேண்டும் இதை கூறியவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்.
(நூல்; அப்துல் ரஜ்ஜாக்)

16. குர்பானி பிராணியை குர்பானி கொடுப்பவரே அறுக்க வேண்டுமா? பிறரும் அறுக்கலாமா? பெண்களும் அறுக்கலாமா?

குர்பானி பிராணியை கொடுப்பவரே அறுக்கலாம்.
இயலாத பச்சத்தில் அறுக்க பிறரை நிர்ணயிப்பது குற்றமில்லை.

“ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய ஹஜ்ஜின் போது 63 ஒட்டகங்களை நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கரங்களினாலே அறுத்தார்கள்.
மீதமுள்ள 37 ஒட்டகங்களை அலி (ரலி) அவர்களை அறுக்க சொன்னார்கள்.
ஆக மொத்தம் 100 ஒட்டகங்களை ரசூல் (ஸல்) குர்பானி கொடுத்தார்கள்.

(நூல்; (முஸ்லிம்)
“பெண்களும் அறுக்கலாம்.
“ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார்.
இதை பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதச்சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள்.
(நூல்;- புஹாரி)

17. குர்பானி பிராணியின் இறைசியையோ அல்லது அதன் மற்ற பாகங்களை விலைக்கு விற்கலாமா? அல்லது
குர்பானி பிராணியை அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கலாமா?

குர்பானி பிராணியின் இறைசியையோ, அதன் உறுப்புகளையோ, தோலையோ, எந்த பகுதியையும் விலைக்கு விற்பதற்கு அனுமதி இல்லை.

குர்பானி பிராணியை முறையாக அறுத்து வெட்டி தருபவர்களுக்குகூட குர்பானி இறைச்சியை கொஞ்சம்கூட கூலியாக கொடுக்க கூடாது. ஏன்னென்றால்.
நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டு கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அதனுடைய இறைச்சி, தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள்.
ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ தோலையோ
கொடுக்கக்கூடாது.
எனவும் கட்டளை இட்டார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
(நூல் :புஹாரி)

18. குர்பானி இறைச்சியை நாம் மட்டும் உன்ன வேண்டுமா? பிறர்க்கும் கொடுக்க வேண்டுமா?

நாமும் உண்ண வேண்டும், பிறருக்கும் உண்ண கொடுக்க வேண்டும்.
“அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்,( பிறரிடம் கேட்க்காமல் உள்ளதைக்கொண்டு) போதுமாக்கி கொள்பவர்க்கும், (பிறரிடம்) கேட்பவருக்கும் உண்ண கொடுங்கள்”. (அல்குர்ஆன் 22:36)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்;
“மாமிசத்தை நீங்களும் சாப்பிட்டுப, பிறருக்கும் உண்ணக் கொடுங்கள், உங்களுக்காகச் சேமித்தும் வையுங்கள்”.
(புகாரி, முஸ்லிம், நஸயி)
குர்பானி மாமிசத்தை முஸ்லிமல்லாதவர்களுக்கும் கொடுக்க எந்தத் தடையுமில்லை.
“(குர்பானிக்கான) ஒட்டகங்களை அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாக உங்களுக்கு நாம் ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மை உண்டு. எனவே, (அது உரிய முறையில்) நிற்கும் போது அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி (அறுத்து) விடுங்கள். அது தனது விலாப் புறங்களின் மீது சாய்ந்து விட்டால் அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள். உள்ளதைக் கொண்டு திருப்தியடைபவனுக்கும், யாசிப்பவனுக்கும் உணவளியுங்கள். நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு இவ்வாறே அவற்றை உங்களுக்கு நாம் வசப்படுத்தியுள்ளோம்”.
(அல்குர்ஆன் 22:36)
இந்த அல்குர்ஆன் வசனத்தில் பொதுவாக ஏழைகள் என்றும், யாசிப்பவர்கள் என்றும்தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
எனினும்,
ஹஜ்ஜுப் பெருநாள் முஸ்லிம்களின் பெருநாளாக இருப்பதால் அவர்கள் அன்றைய நாளில் பசியின்றி இருப்பது அவசியம்.
இந்த அடிப்படையில் தான் குர்பானி கொடுக்கப்படுகிறது.
எனவே, 
முதலிடம் முஸ்லிம் ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் கொடுப்பது முக்கியமாகும்.
கூடுதலாக இருக்கும்போது காபிர்களுக்குக் கொடுத்தால் எந்தத் தவறுமில்லை.

19. இறந்தவர்களுக்காக குர்பானி கொடுக்கலாமா?

ஒருவர் தமக்காகவும், தன் குடும்பத்தாருக்காகவும் குர்பானி கொடுக்கிறேன் என்று நிய்யத் செய்து கொள்கிறபோது.
அதில் இறந்தவரும் அடங்குவர்.

*ரசூல்(ஸல்) குர்பானி பிராணியை அறுக்கும் பொது “பிஸ்மில்லாஹ்‘ முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும்,
முஹம்மதின் சமுதாயத்தாரிடம் இருந்தும்.
எற்றுகொள்வாயாக என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்;- ஆயிஷா (ரலி),
(நூல்; முஸ்லிம் 3637)


இறந்தவர்களுக்காக ஹஜ் செய்வது கூடும். என்பது 
எவ்விதமான கருத்து கருத்து வேறுபாடின்றி ஹதீஸிலிருந்து தெளிவாகதெரிகிறது.


எனவே ஹஜ்செய்பவர்கள் குர்பானி கொடுக்கவேண்டும். 
அப்போது அந்த குர்பானியின் நன்மை இறந்தவர்களுக்கு சேரும் என்பதில் எவ்வித ஐய்யமுமில்லை.


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)