சவுதி அரேபியாவில் ஐந்து பேர் துல் ஹஜ் பிறையைக் கண்டதாக சபக் இணையம், அல் ரியாத் இணைய செய்திச் சேவையும் செய்தி வெளியிட்டுள்ளது. இதனை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
நாளை வியாழன் துல் ஹஜ் பிறை ஒன்று இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை அரபா தினம் மற்றும் மறுநாள் அக்டோபர் 4ஆம் தேதி சனிக்கிழமை பெருநாள்.
அல்லாஹ்வால் புனிதப்படுத்தப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றான துல் ஹஜ் மாதத்தை அடைந்து கொண்ட நாம் இம் மாதத்தின் முதல் ஒன்பது நாற்களும் நோன்பு இருக்க முயற்சிப்போம்.
மேலும் அதிகமதிகமாக அல்லாஹ்வை துதித்து அவனது ஞபகத்தோடு உபரியான தொழுகைகளிலும் அதிகம் கவணம் செலுத்துவோம்.
குறிப்பாக அல்லாஹ்வின் புனித வேதமாகிய அல்குர்ஆனுடன் நெருங்கிய தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்வோம்.
மேலும் துல் ஹஜ் ஒன்பதாவது நாள் அதாவது அரபா நாளில் கட்டாயமாக (ஹஜ்ஜூக்கு செல்லாத மக்கள்) நோன்பு வைத்து ஒரு வருடம் முன் செய்த பாவங்களையும் எதிர்வரும் ஒரு வருடம் செய்ய இருக்கும் பாவத்தையும் போக்கிக் கொள்ள முயற்சிப்போம்
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது