அதிரை 8வது வார்டில் சேனா மூனா ஹாஜா முஹைதீன் அவர்களின் வெற்றியை வெடிவெடித்து கொண்டாடிய அ.தி.மு.க வினர்!

0

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 8 வது வார்டு பகுதியில் நடைபெற இருக்க்கும் இடைதேர்தலில் அதிமுக கட்சியின் சார்பில் கடற்கரை தெருவை சேர்ந்த சேனா மூனா என்கிற ஹாஜா முகைதீன் போட்டியிடுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்வது இன்றுடன் முடிவடைகிறது.

 இதுவரையில் இவரை எதிர்த்து மாற்று வேட்பாளர் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் போட்டியின்றி சேனா மூனா என்கிற ஹாஜா முகைதீன் வெற்றி பெற இருப்பதை அடுத்து பேரூராட்சி முன்பாக ஒன்று கூடிய அதிமுக கட்சியினர் வேட்பாளர் சேனா மூனா என்கிற ஹாஜா முகைதீனுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இதில் அதிமுக எம்ஜிஆர் மன்ற மாவட்ட இளைஞர் அணி செயலளர் ஜெய பிரகாஷ் நாராயணன், அதிமுக சிறுபான்மை நல பிரிவு மாவட்ட செயலாளர் அதிரை அஜீஸ், நகர அதிமுக செயலாளர் பிச்சை, துணை செயலாளர் முஹம்மது தமீம், வார்டு கவுன்சிலர்கள் அப்துல் லத்திப், சிவக்குமார், உதயகுமார், அபூ தாஹிர், ஹாஜா பகுருதீன் மற்றும்  ஏனைய அதிமுக பொறுப்பாளர்கள், உள்ளிட்ட கடற்கரைதெரு பிரமுகர்கள், இளைஞர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)