தஞ்சை மாவட்டத்தில் வேட்பபுமனு தாக்கல் முடிவடைந்தது

Irshad Bin Jahaber Ali
0
தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் 101 பதவிகளுக்கு 201 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வருகிற 18–ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த மாதம் 28–ந்தேதி தொடங்கியது. வேட்புமனுத்தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் ஆகும். வாக்கு எண்ணிக்கை வருகிற 22–ந்தேதி நடைபெறுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் 101 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 1 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கும், 6 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கும், 6 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 81 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கும், 1 மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கும், 6 பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இதில் நேற்று முன்தினம் வரை 107 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 94 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.

இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு 10 பேரும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 24 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 24 பேரும், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 119 பேரும், மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு 6 பேரும், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு 18 பேரும் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். இதுவரை மொத்தம் 201 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)