விசாரணைக் கைதிகள் பாதி தண்டனையை அனுபவித்தாலே விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
இதற்கு முஸ்லிம் இயக்கங்கள் களத்தில் இறங்கி அனைத்து அப்பாவியாக குற்றம் சாட்டப்பட்டு குற்றம் நிரூபிக்க முடியாமல் வாடும் சகோதரர்களே விடுவிக்கவேண்டும்
மாவட்ட கிளைகள் விரைய வேண்டும்
விசாரணை கைதியாக இருக்கும் குற்றவாளிகள் தாங்கள் செய்த குற்றத்துக்கான அதிகபட்ச தண்டனையில் பாதி தண்டனையை அனுபவித்து விட்டாலே அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய சிறைகளில் வாடும் 4 லட்சம் சிறைக் கைதிகளில் சுமார் 3ல் 2 பங்கு அதாவது 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் நீண்ட கால விசாரணையின் காரணமாக பல ஆண்டுகள் தண்டணை அறிவிக்கப்படாமலேயே விசாரணைக் கைதிகளாக சிறையில் காலம் கழித்து வருகின்றனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், ஒரு குற்றம் சாட்டப்பட்டவர், அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டு கிடைக்கும் தண்டனையில் பாதி காலத்தை அவரது தண்டனை நிரூபிக்கப்படாமல் விசாரணைக் கைதியாகவே கழித்துவிட்டால், அவரை விடுதலை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் சட்டம் தண்டனை வழங்கும் போது பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை.
இது குறித்து இன்றைய தீர்ப்பில் குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சிறைகளும் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும், இந்த சட்டத்தை உறுதி செய்யும் வகையில் அனைத்து உள்ளூர் நீதிபதிகளும் சிறைச்சாலைகளை பார்வையிட்டு விசாரணைக் கைதிகளுக்குக் கிடைக்க வேண்டிய உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
தண்டனையில் பாதி காலத்தை விசாரணைக் கைதியாகவே கழித்துவிட்ட சிறைக் கைதிகளை உரிய நடைமுறைகளைச் செய்து அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று உள்ளூர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு லோதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சட்டம் மற்றும் நீதித் துறைக்கு மத்திய அரசு உரிய நிதியை ஒதுக்கி, கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும், உரிய நீதி, உடனடியாகக் கிடைக்கும் வகையில் விசாரணைகள் விரைந்து நடைபெற மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளார்.
Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது