விளம்பரம் என்பது வியாபாரத்தின் இன்றியமையாத ஒன்று. வணிகத்தின் ஊற்றுக்கண். சந்தைபடுத்துதலின் அடிப்படை. முன்காலத்திலேல்லாம் விளம்பரம் என்பது வாய்வழி செவிவழி.
ஒரு மனிதரிலிருந்து இன்னொரு மனிதருக்கு சென்றடைந்தது. அது உண்மையாகவும் இருந்தது.
உதாரணமாக திருநெல்வேலி இருட்டுகடை அல்வா.
அதேபோல் சமூக சிந்தனையும் விளம்பரபடுத்தலில் நுழைந்து புரட்சிகளும் செய்தன
.
உதாரணம்:-
முன்னர் விளம்பரபடுத்தபட்ட "புள்ளிராஜாக்கு எய்ட்ஸ் வருமா?"
இப்போது விளம்பரபடுத்தபட்ட "சூனியத்தை நிரூபித்தால் 5000000 பரிசு". இதுபோன்ற விளம்பரங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டின.
ஆனால் இன்றைய சில விளம்பரங்களை பார்க்கும்போது முழுக்க முழுக்க பொய்களையே தாங்கி வருகிறது.
உதாரணமாக:-
சென்னையின் மிக அருகில் ஃபிளாட் விளம்பரம், சொட்டை தலையிலும் முடி முளைக்கும் அமேஜான் தைல விளம்பரம், அதுமட்டுமல்லாமல் சாதாரண பொருட்களை சர்வேதேச லெவலுக்கு பில்டப் கொடுத்து விற்கப்படும்.
வசதிக்கேற்ப வளைக்கும் டேபிளும், சிறிய கப்பியோடு இணைந்த கயிறும் தன் இஷ்டத்திற்கு விலையேற்றி விற்கபட்டன.
பூக்கடைக்கு எதுக்கு விளம்பரம்? என பழமொழி கூறுவதுண்டு. காரணம் அதன் வாசனையும்,உண்மை தன்மையும் அதற்கு தானாய் ஏற்படும் விளம்பரம். அதுபோலவே மருத்துவம்,மருத்துவமனை,
கல்வி,கல்விக்கூடத்திற்கும் விளம்பரம் தேவைபடாது.
ஆனால் இன்றோ...?!! படிக்கும்போதே சம்பளத்துடன் வேலை என்றும் தங்களிடம் படித்தால் வெளிநாட்டில் வேலை என்றும் கல்வியை கூவி கூவி விற்கின்றனர்.
இதைவிட மருத்துவமும்,மருத்துவமனையின் விளம்பரமும் படுமோசம்.
முதலில் சித்தா,ஆயுர்வேத,யுனானியை பார்ப்போம்:-
நாங்கள் ஐந்து தலைமுறை, பத்து தலைமுறை வைத்தியன் என புருடால் விட்டு டிவி முன் உக்காந்து "வாலிப,வயோதிக அன்பர்களே" என்று ஆரம்பித்து தன் மருந்தை விற்க டே,டா என ஒருமையில் உளருவான்.
சிலர் சித்தர்களின் பரம்பரை என்றும் காட்டுக்கே கேமிராவுடன் சென்று ஜூனியர் ஆர்ட்டிஸ்டை நடிக்க வைத்து நம்பவைப்பான். அதேசமயம் இப்படியான ஒரு சித்தமாமணிக்கே குழந்தையில்லாமல் புகழ்பெற்ற ஆங்கில வைத்தியரிடம் சிகிச்சைக்கு சென்றது வெளிவந்து சந்திசிரித்தது.
எனினும் அடுத்த சிலநாளே மறுபடியும் விளம்பரம் தொடர்ந்தது டிவியில். இவர்கள்தான் இப்படியென்றால் படித்து பட்டம் பெற்ற மருத்துவர்களும் தன் பங்கை செலுத்தினர்:- "நாங்க இருக்கிறோம்" என்றும் அறுவை சிகிச்சையை குறுவை சாகுபடிபோல் விளம்பரம் செய்து கல்லா நிரப்பி பாமரனுக்கு மருத்துவம் செல்லாதபடி மருத்துவத்தின் விலையை வானுயர உயர்த்தினர்.
அடுத்து பக்தி சார்ந்த மூடநம்பிக்கை விளம்பரம்:-
இந்த கல் மோதிரம்போட்டால் வாழ்க்கையில் உயரலாம் என்கிறான், அவன் பத்து விரலில் பத்து மோதிரம் ஆனால் அவன் உயரவில்லை.....!!! உங்கள் பெயரை மாற்றினால் உலகையே மாற்றலாம் என்கிறான் இன்னொருவன், ஆனால் அவன் பெயர் பலருக்கும் தெரியவில்லை....!!
கஷ்டபட்டு கடன் வாங்கி கட்டிய வீட்டை செல்வம் கொழிக்க வாஸ்துபடி இடிக்க சொல்கிறான் ஒருவன். ஆனால் அவனோ வாடகை வீட்டில்....!!!!
உங்கள் வருங்காலத்தை கணிக்கிறேன் என்று சொல்கிறான் ஒருவன்,, ஆனால் அவனுடைய ஒரு நாளைய வருமானமே அவனுக்கு தெரியாது....!!!!!
இதைவிட ஒருபடி மேலேபோய் மிஷினில் வரைந்த படத்தை வைத்துகொண்டு ஒரு கடவுளின் யந்திரமென்றும் இதை வைத்திருக்குமிடம் வளம் கொழிக்கும் என்கிறான் ஆனால் அதை மொத்தமாக வைத்திருக்கும் அவனே இன்னும் விளம்பரபடுத்திக்கொண்டுதான் விற்று கொண்டிருக்கிறான்....!!!!!
இன்னும்கொடுமை டெலிசாப்பிங் பெயரில் வெளிநாட்டிலே விற்கமுடியாமல் தட்டுத்தடுமாறும் பொய்களை அப்படியே அவ்விளம்பரத்தை டப்பிங் செய்து வெளிநாட்டுகாரன் நம் தலையில் மிளகாய் அரைக்க இங்குள்ளவனே உதவுகிறான்.
ஒன்று மட்டும் உறுதியாய் தெரிகிறது பணம் சம்பாரிக்க எந்த வகையிலும்,எப்படியும் பொய் சொல்லலாம் என வியாபாரம் மாறிவிட்டது விளம்பரம் என்னும் பெயரில்.
இதை தடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு.
எப்படி சினிமாவின் தவறான காட்சிகளை நீக்க சென்சார் போர்டு இருக்கிறதோ அதுபோலே இவ்வாறான ஃபிராட் விளம்பரங்களை கட்டுபடுத்த ஒரு போர்டை அரசே ஏற்படுத்த வேண்டும். அப்படி ஏற்படுத்தாதவரை ஏமாறுபவன் ஏமாறிக்கொண்டே இருப்பான் ஏமாற்றுபவன் ஏமாற்றிக்கொண்டே இருப்பான்.
இந்நிலை மாறுமா?
ஆக்கம் :
அதிரை உபயா (எ) உபயதுல்லா

Advertisement

Very useful article
ReplyDelete