எல்லோ (Ello) பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். இல்லை என்றால் நிச்சயம் இனி வரும் நாட்களில் எல்லோ பற்றி கேள்விப்படலாம். ஏனெனில் இப்போது இணையத்தில் எல்லோ பற்றி தான் பேச்சாக இருக்கிறது. வெகுவேகமாக வளர்ந்து வரும் எல்லோ அதைவிட வேகமாக பிரபலமாகி வருவதால், திடிரென உங்கள் நண்பர்களில் யாரேனும் ,நான் எல்லோவில் சேர்ந்துவிட்டேன், நீங்கள் இன்னுமா உறுப்பினராகவில்லை என்று கேட்கலாம்.
எல்லோ என்றால் என்ன?
இது என்ன எல்லோ புதிதாக இருக்கிறது ? எங்கிருந்து முளைத்தது இந்த எல்லோ! இது என்ன சேவை ? ஏன் இதைச்சுற்றி இத்தனை பரபரப்பு?
எல்லோ , பேஸ்புக் போல புதிய சமூக வலைப்பின்னல் சேவை. பேஸ்புக்கிற்கு போட்டியாக உருவாகி இருக்கும் சமூக வலைப்பின்னல் சேவை.
எல்லோ , பேஸ்புக் போல புதிய சமூக வலைப்பின்னல் சேவை. பேஸ்புக்கிற்கு போட்டியாக உருவாகி இருக்கும் சமூக வலைப்பின்னல் சேவை.
பேஸ்புக்கிற்கு போட்டியா? இப்படி சொல்லிக்கொள்ளும் எத்தனை சமூக வலைப்பின்னல் சேவைகளை கேள்விபட்டாயிற்று என்று அலட்சியம் கொள்வதற்கு இல்லை. ஏனெனில் எல்லோ, பேஸ்புக் மீது சொல்லப்படும் குறைகளை எல்லாம் களைந்து முற்றிலும் புதிதான பயனாளிகளை மையமாக கொண்ட சமூக வலைப்பின்னலாக அறிமுகமாகி இருப்பதாக சொல்லப்படுவது தான் முக்கிய விஷயமாக இருக்கிறது.
பேஸ்பிக்கிற்கு மாற்று
’ உங்கள் சமூக வலைப்பின்னல் சேவை விளம்பர நிறுவனங்களால் சொந்தம் கொண்டாடப்படுகிறது என எல்லோ நெத்தியடியாக பேஸ்புக் மீது தாக்குதல் நடத்தி வீட்டு, விளம்பரங்கள் இல்லாத சேவையாக அறிமுகம் செய்து கொள்கிறது. பயனாளிகளின் டைம்லைனில் விளம்பரங்களை இடம்பெற வைப்பதில்லை என்பதையும் பயனாளிகள் பற்றிய விவரங்களை சேகரித்து மூன்றாவது நிறுவனங்களுக்கு விற்பதில்லை என்பதையும் எல்லோ தனது சேவையின் சிறப்பம்சமாக சொல்கிறது. இவை இரண்டுமே பேஸ்புக் மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டாக இருக்கிறது.
பேஸ்புக் உங்களை வைத்து காசு பார்க்கிறது என்று சொல்லப்படுவதை பொருட்படுத்தாதவர்கள் கூட பேஸ்புக் டைம்லைன் முழுவதும் விளம்பரமயமாகி வருவதால் நிச்சயம் அதிருப்தி கொண்டிருப்பார்கள். நண்பர்களுடன் தகவல்களை பகிர்ந்து கொண்டு அவர்களின் தகவல்களை தெரிந்து கொள்வதற்கான சேவை என்பதை மீறி பேஸ்புக்கில் எப்போதும் விளம்பர செய்திகளும் தகவல்களும் எட்டிப்பார்த்து கொண்டிருக்கின்றன.
இந்த தொல்லைகள் எல்லாம் இல்லாமல் நட்பு பகிர்வுகளுக்கானதாக மட்டுமே இருக்கும் எளிமையான தூய்மையான சமூக வலைப்பின்னல் சேவை இருந்தால் எப்படி இருக்கும் ? என்ற ஏக்கம் பலருக்கு இருக்கலாம்.
Advertisement




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது