அதிராம்பட்டினம்
கடற்பகுதியில் தற்போது 2000க்கு மேற்பட்ட ஏக்கர்
நிலப்பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. இதில் தம்பிக்கோட்டை, மறவக்காடு அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் உப்பு உறபத்தி
செய்யப்பட்டுவருகிறது இங்கு கெமிக்கல் உப்பு உணவு உப்பு ஆகிய இரண்டு விதமான உப்பு
தயாக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி துவங்கி தற்போது வரை நடைபெற்றுவருகிறது.
கடந்த வருடம் இதே காலங்களில் வெப்பசலனம் காரணமாக அடிக்கடி பெய்து
வந்த மழையினால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உற்பத்தியாளர்கள் கடுமையான நஷ்டத்தை
அடைந்தனர் இந்நிலையில் தற்போது பரவலாக அனைத்துப்பகுதிகளிலும் மழை பெய்து வரும்
நிலையில் அதிராம்பட்டினம மற்றம் இதைச்சுற்றியள்ள பகுதிகளில் மட்டும் மழை பெய்யாமல்
இருந்து வருவதால் உப்பு உற்பத்தி பணிகளில் பாதிப்பு ஏற்படாமல் தொடர்ந்து நடைபெற்று
வருகிறது இதில் கெமிக்கல் உப்பு உற்பத்தி தற்போது தொழிலாளர்கள் உப்பு வாரும்
பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதுபற்றி உப்பளத்தொழிலாளர்கள் கூறுகையில் தற்போது கெமிக்கல் உப்பு
வாரும் பணி நடைபெற்று வருகிறது இந்த கெமிக்கள் உப்பு ஆந்திரா கர்நாடகா கேரளா ஆகிய
பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள உப்பு ஆலைகளில் மெண்மைப்படுத்தப்பட்டு
டிகிரி ஏற்றி அங்கிருந்து பிற தொழிற்சாலைகளுக்கு அதாவது இந்த கெமிக்கல் உப்பு உரம்
தயாரிக்கவும் சோப்பு சோடா பானம் வீடு சுத்தம் செய்யும் ஆசிட்
தயாரிக்கப்பயன்படுத்தப்படுவதால் அந்தந்த தொழிற்சாலைகளுக்கு
அனுப்பிவைக்கப்படுகிறது.
பொதுவாக உப்பு உற்பத்தி ஜனவரி மாதம் துவங்கி அக்டோபர் மாதம் வரை
நடைபெறும் இனிவரும் காலம் மழைகாலம் என்பதால் உப்பு உற்பத்தி நிறுத்தப்படும் நிலை
ஏற்படும் மழை இல்லை என்றால் உப்பு உற்பத்தி அக்டோபர் மாதம் வரை நீடிக்கும்
என்றனர்.
Advertisement







1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது