எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்கள் ஆன்லைனில் ஹால்டிக்கெட் பெறலாம் !

0
  

  
   எஸ்எஸ்எல்சி துணைத்தேர்வு தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என மாவட்டக்கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். 

பட்டுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் (பொ) வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடைபெறவுள்ள செப்டம்பர்-அக்டோபர் 2014 எஸ்எஸ்எல்சி துணைத்தேர்வு எழுத அரசு தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் அரசுத்தேர்வுகள் சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். http://tndge.in/   என்ற வாசகத்தினை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்தால் அவர்களுடைய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் (தட்கல்) விண்ணப்பிப்பதற்கான நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். 

-dinakaran
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)