பள்ளி மாணவி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு காவல் துறையின் ஒரு முக்கிய எச்சரிக்கை செய்தி !

0

  
  சென்னை, கோவை, மதுரை, திருச்சி ,போன்ற பெருநகரங்களில் இப்பொழுது இளம் பெண்களை கடத்துவதற்கு புதிய வழிமுறையை கையாள்வதாக காவல்துறையால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது!

மாணவிகள் இளம் பெண்கள் பள்ளி/கல்லூரி வகுப்புகளுக்கு வரும் வழியில் அல்லது முடிந்து வீட்டுக்கு செல்லும்வழியில் எதாவது குழந்தை தனியாக தெருவில் அமர்ந்து அழுதுகொண்டே "அக்கா என்ன வீட்டுல விடுங்கக்கா" என்று சொல்லி குறிப்பிடும் முகவரிக்கு அழைத்து செல்ல வேண்டாம்!

அவர்களை நேரடியாக காவல்நிலையத்தில் கொண்டு போய் சேர்க்கவும்! முடிந்தால் வேறு ஒருவர் உதவியுடன் இதை செய்யவும், சமூக விரோதிகள் குழந்தைகளுக்கு இவ்வாறு பழக்கப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்! அவர்களிடம் சிக்கிவிட வேண்டாம்!

...இன்றைய இந்த உலகில் அன்பு, கரிசனம், உதவி தான் இல்லை, இல்லை என்று கூப்பாடு போடுகிறோம், உதவ முன்வரும் கொஞ்சம் நஞ்சம் நல்ல உள்ளங்களையும் இவ்வாறு செய்யும், தவறாக பயன்படுத்தும் சமூக விரோதிகளை என்ன 
செய்யலாம் ?

இந்த தகவலை நமதூரில் உள்ள கல்லூரி மற்றும் பெண்கள் பள்ளிகளில் தெரிவிக்கும் படி அதிரை பிறை சார்பாக கேட்டு கொள்கிறோம்.

படம்: சென்னை டி.ஏ.வி பள்ளியில் வழங்கப்பட்ட சுற்றறிக்கை !

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)