தமிழகத்தின் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் தற்போது நடைபெற்றது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோய்விட்டது.
தற்போதைய சூழலில் 10 ஆண்டுகளுக்கு ஜெயலலிதாவால் மீண்டும் எம்.எல்.ஏவாகவோ அல்லது முதல்வராகவோ முடியாது. ஜெயலலிதா வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பே தவறு என்றும் ஜெயலலிதா நிரபராதிதான் என்றும் ஒரு தீர்ப்பு வந்தால் மட்டுமே அவரால் எம்.எல்.ஏ.வாகி முதல்வராக முடியும். அதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவுதான். இதனால் தமிழகத்தின் புதிய முதல்வர் யார் என்பதில் பரபரப்பு நீடிக்கிறது. இதற்காக பெங்களூரில் இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று சென்னை திரும்பியுள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் அதிமுக தலைமை நிலையத்தில் நடைபெற்றது .இந்த கூட்டதில் ஒ.பன்னீர் செல்வம் அவர்கள் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது