திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி உள்பட 11 கல்லூரிகளுக்கு ஒருமைவகை பல்கலைகழக அந்தஸ்து !

0

நாடெங்கிலும், 45 தன்னாட்சி கல்லூரிகள், ஒருமை வகை பல்கலைக் கழகங்களாகமாற்றப்படுகின்றன. இந்த பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த, 11 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மற்றும் பல்கலைக்கழக நிதிக் குழு (யு.ஜி.சி.,) இணைந்து, டில்லியில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தின. இதில், அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்கள் கலந்து  கொண்டனர்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட, 45 தன்னாட்சி கல்லூரிகள், ஒருமை வகை பல்கலைக் கழகங்களாக தரம் உயர்த்தப் படுவதாக அறிவிக்கப்பட்டது. 

அதாவது, ஒருமை வகை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற கல்லூரிகள், அவர்களே மாணவர்களுக்கு பட்டம் வழங்கிக் கொள்ளலாம். பிற பல்கலைக் கழகங்களை சார்ந்து இருக்க வேண்டாம்.


 அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த, 11 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. கல்லூரிகள் வருமாறு:

திருச்சியில், செயின்ட் ஜோசப், 
திருச்சி ஜமால் முகமது, 
திருச்சி தேசிய கல்லூரிகள்,
கோவையில், கொங்கு நாடு கல்லூரி, 
கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி; 
ஈரோட்டில், வெள்ளாளர் மகளிர் கல்லூரி; 
மயிலாடு துறையில், 
ஏ.வி.சி., கல்லூரி,  
சிவகாசியில், ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரி, 
மதுரையில், பாத்திமா கல்லூரி,
பாளையங்கோட்டையில், செயின்ட் சேவியர் கல்லூரி
உட்பட 11 கல்லூரிகள் இந்த அந்தஸ்தை பெற்றுள்ளன. இந்த கல்லூரிகளுக்கு, மூன்றாண்டு இடைவெளியில் அடிப்படை கட்டமைப்பு நிதியாக, 55 கோடி ரூபாய் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)