அதிரை கடைதெருவில் பல நாட்களாக சுத்தம் செய்யப்படாத கால்வாயால் நோய் பரவும் அபாயம் (படங்கள் இணைப்பு)

0

அதிரை கடைத்தெரு ஸ்டேட் வங்கி சாலையில் பல நாட்களாக சுத்தம் செய்யப்படாத கால்வாயால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கால்வாயில் குப்பைகள் மற்றும் பாலிதீன் பைகள் அடைப்பட்டு சாக்கடை தண்ணீர் சரியாக செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் அனைத்தும் வெளியேறி சாலையில் ஆறு போல் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றமும் வீசி வருகிறது.

பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் அதிகளவில் சென்று வரும் இச்சாலையில் கழிவு நீர் தொடர்ந்து பல நாட்களாக ஓடிக்கொண்டிருப்பதால் பலருக்கும் இச்சாலையை கடந்து செல்வதற்க்கு அருவறுப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவியுள்ளது. எனவே பொதுமக்களின் உடல் நலன் கருதி அதிரை பேரூராட்சி அதிகாரிகள் விரைந்து இப்பகுதியில் நிலவி வரும் கழிவு நீர் பிரச்சனையை சரி செய்யுமாறு அதிரை பிறை சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.






a
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)