சவூதி -தம்மாமில் பெரும் தீ விபத்து - இருவர் பலி !

0

சவூதி அரேபியா, தம்மாமில் உள்ள அல்-பிலாத் மாலில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

சனிக்கிழமை காலையில் நடைபெற்ற இத்தீவிபத்தில் அல்-பிலாத் மாலில் இருந்த நெஸ்டோ சூப்பர் மார்க்கெட்டின் 30,000 சதுர மீட்டர் கொண்ட தரைத்தளம் உட்பட பெரும்பாலான பகுதிகளில் தீ பரவியுள்ளது.

தீயணைப்புத்துறையின் 20 அணியினர் கடுமையான போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்துள்ளனர். இத்தீவிபத்தில் 6 நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேற்று காலையில் இரு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பலியான இருவரும் உள்ளூர் அதிகாரிகள் எனத் தெரியவந்துள்ளது. மின்சார வயர்களில் ஏற்பட்ட குறைபாடே தீ விபத்திற்கான காரணமாக இருக்கும் எனத் தெரிகிறது.



Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)