நாகை மாவட்டம், நாகூரைச் சார்ந்தவர் சகோ. அஹமத் ரிஸ்வான் (வயது 21) .இவர் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் தனது இளநிலை பட்டப்படிப்பை முடித்து விட்டு தற்பொழுது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.
கல்லூரி பருவத்திலிருந்தே பத்திரிக்கை துறையில் ஆர்வம் உள்ள இவர் முகநூல் வாயிலாகவும் அச்சு, இணைய தள ஊடகங்கள் வாயிலாக பல்வேறு கட்டுரைகளை வடிவமைத்துள்ளார்.. பல மூத்த பத்திரிக்கையாளர்களுடன் தனிப்பட்ட நெருக்கமான தொடர்பில் உள்ளார். ‘அறிந்து கொள்வோம்’ எனும் முகநூல் பக்கத்தின் வாயிலாக ஆயிரக்கணக்கான பல்வேறு தரப்பட்ட மக்களுடன் தொடர்பில் உள்ளார். இவரின் ஆக்கங்கள் சமரசம், மாணவர் குரல், மக்கள் ரிப்போர்ட் மற்றும் பாமரன்(http://mrpamaran.com/), உதயதாரகை(http://udayatharagai.com/) போன்ற ஊடகங்களில் பிரசுரமாகி உள்ளன.
அரசியல் மற்றும் பெண்ணியம் சார்ந்த எழுத்துக்களில் அதிக ஆர்வம் உள்ளவர். சமகால அரசியல் சூழலை உன்னிப்பாக கவனித்து வருபவர். இவர் எழுதிய பாசிசத்திற்கு எதிரான கட்டுரை பலமான கவனயீர்ப்பை பெற்றது. அதற்க்கெதிரான அக்கறை கலந்த எச்சரிக்கை ஓசை இவரின் வீட்டின் கதவு வரை சென்று தட்டியதன் மூலம் இவரின் எழுத்தின் வலிமையை உணரலாம். விரைவில் தொடங்கயிருந்த ஒரு தொலைக்காட்சி அலைவரிசை தனது குழுமத்தில் இவரை இணைத்துக்கொள்ளவும் தயாராக இருந்தது. இறைவன் இவரின் ஆற்றலை மென்மேலும் அதிகப்படுத்துவானாக.
இவருடைய படைப்புகளை அதிரை பிறை இணையதளத்திலும் வெளியிட வேண்டும் என்ற நோக்கில் அதிரை பிறை நிர்வாகி இவரை தொடர்பு கொண்டார். சகோ. அஹமத் ரிஸ்வான் அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்தார் .இனி இவருடைய படைப்புகள் வாரம் ஒரு முறை நமது தளத்தில் வெளியிடப்படும்.
-அதிரை பிறை குழு
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது