முத்துப்பேட்டையில் தொடரும் விநாயகர் ஊர்வல வன்முறைகள் உண்மை அறியும் குழு இடைக்கால அறிக்கை தாக்கல்.
முத்துப்பேட்டையில் கடந்த செப் 3 ஆம் தேதி நடந்த விநாயகர் ஊர்வலத்தில் நடந்த வன்முறைகள் அதையெடுத்து போலீஸ்காரர் ஒருவர் தாக்கப்பட்ட வழக்கில் காவல்துறை நடத்திய மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவைகளின் உண்மை நிலையை அறிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பின்(NCHRO)தேசிய தலைவர் பேரா.அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழுவினர் 22 ஆம் தேதி முத்துப்பேட்டை வந்தனர்.
இந்த குழுவினர் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டனர்.பின்னர் போலீஸ்காரர் தாக்கப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் நடத்திய அத்துமீறல்களை பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று அறிந்து கொண்டனர்.தொடர்ந்து துப்பரவு தொழிலாளி சரோஜாவிடம் மற்றொரு போலீஸ்காரர் நடத்திய பாலியல் தொந்தரவுகளையும் நேரில் சென்று இக்குழுவினர் அறிந்து கொண்டர்.
அதனையெடுத்து பிஜேபி திருவாரூர் மாவட்ட தலைவர் சிவா மற்றும் காவல்துறை துணைக் கண்கானிப்பாளர் கணபதி,புலனாய்வு அதிகாரி சண்முகவேல்,திருவாரூர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி. அனார்கலி பேகம் உள்ளிடவர்களுடன் இக்குழு விரிவாக பேசியது.
நேற்று செப் 23 முத்துப்பேட்டை கொய்யா மகாலில் குழுவின் தலைவர் பேரா.அ.மார்க்ஸ் பத்திரிக்கையாளர்களை சந்தித்து இடைக்கால அறிக்கையை உண்மை அறியும் குழு வழங்கியது.இக்குழுவின் அறிக்கையில் "விநாயகர் ஊர்வல வன்முறைகளுக்கு தீர்வு மாற்றுப்பாதையே(மன்னை சாலை வழியாக செல்லுவது)என்றும்,போலீஸ்காரர் தாக்கப்பட்ட வழக்கில் அப்பாவி இளைஞர்களை கைது செய்த காவல்துறைக்கு தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது.மேலும் இவ்வழக்கில் காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டியது.இக்குழுவின் அறிக்கை காவல்துறையின் உயர் அதிகாரிகளின் பார்வைக்கும்,தமிழக முதல்வருக்கும் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது என்றும் தெரிவித்தனர்.
இக்குழுவில் பேரா.அ.மார்க்ஸ், தேசிய தலைவர், மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு(NCHRO),சென்னை, வழக்குரைஞர் தை கந்தசாமி, தலித்பண்பாட்டுப்பேரவை, திருத்துறைபூண்டி, மு.சிவகுருநாதன, மனித உரிமைகளூக்கான மக்கள் கழகம், திருவாரூர், அப்துல் காதர், சமூக ஆர்வலர், திருத்துறைபூண்டி, முஹம்மது ஷிப்லி, துணை ஆசிரியர், மக்கள் ரிப்போர்ட்,சென்னை, அபுஃபைசல், பத்திரிக்கையாளர்,சென்னை. ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்று இருந்தனர்.
-muthupettai bbc
Advertisement










1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது