* கொய்யாப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.
* மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் தொடர்ந்து கொய்யாப்பழத்தை சாப்பிடலாம்.
* கொய்யாப்பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட, அப்படியே கடித்து சாப்பிட்டால், பற்களும், ஈறுகளும் வலுவடையும்.
* ஈறுகளில் வீக்கம் அல்லது வலி இருந்தால், கொய்யா மரத்தின் இலைகளை தண்ணீரில் போட்டு காய்ச்சி சிறிது நேரம் கழித்து வாயை கொப்பளித்தால், வலி மற்றும் ஈறு வீக்கம் குறையும்.* மழைக்காலத்தில் பெரும்பாலானோருக்கு இருமல் மற்றும் தொண்டைப்புண் வரக்கூடும். இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் கொய்யா இலைகளை தண்ணீரில் போட்டு காய்ச்சி, வாயை கொப்பளித்தால் விரைவில் குணமாகும்.
* ரத்த சோகை இருப்பவர்களும் கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
* மது போதைக்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட கொய்யாப்பழத்தை அதிகம் சாப்பிட வேண்டும். இதன்மூலம் மது மற்றும் போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெற முடியும்.
* கொய்யாப்பழத்தில் லைகோபைன் மற்றும் கரோட்டினாய்டுகள் அதிகம் உள்ளன. இவை புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும் குணம் கொண்டவை.
* ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள பொட்டாசியம் அவசியமானது. கொய்யாப்பழத்தில் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது. எனவே இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் சீராகும்.
* கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால், இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் கண்களில் ஏற்படும் குறைபாடுகளை தடுக்கலாம்.
* கொய்யாப்பழத்தின் தோலில்தான் அதிக சத்துக்கள் உள்ளன. எனவே இதன் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. தோல் நீக்காமல் சாப்பிட்டால், முகத்திற்கு பொலிவும், அழகையும் தருவதோடு, தோல் வறட்சியை நீக்கும். மேலும் முதுமை தோற்றத்தை குறைத்து இளமையாக வைத்திருக்கும்.
குறிப்பு:
* பல்வேறு மருத்துவ குணம் உள்ள கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், வயிற்று வலி உண்டாகும்.
* கொய்யாப்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். அப்படி சாப்பிட்டால், பித்தம் அதிகரித்து, வாந்தி மயக்கம் ஏற்படக்கூடும். எனவே ஒரு நாளைக்கு 2 கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது.
* வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை சாப்பிடக்கூடாது.
பூசணியின் மகத்துவம்: பூசணி கொடியில் காய்க்கும் காய். அதிக செலவு இல்லாமல் வீட்டு தோட்டத்திலேயே செழிப்பாக வளரக்கூடியது. இதில் விட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து போன்றவை நிறைவாக உள்ளன. பூசணிக்காயை சாப்பிடுவதன் மூலம் ஊட்டச்சத்துக்கள் அதிகம் கிடைக்கும். ஆஸ்துமா, சர்க்கரை நோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் கீல்வாதம் போன்றவையும் வராமல் தடுக்கும் தன்மை உள்ளது.பூசணி சாறு சாப்பிடுவதால் இதய நோய் மற்றும் புற்றுநோய்களை கட்டுப்படுத்தலாம். இதில், பொட்டாசியம் அதிகளவில் உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
பூசணியில் உள்ள ‘ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ்‘ என்ற சத்து உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது. இதில் உள்ள மூலப்பொருள்கள் ரத்தம் வழியாகச் சென்று, நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. பூசணி சாப்பிடுவதன் மூலம் நம்முடைய ஆற்றல் 23 சதவிகிதம் அதிகரிக்கும்.சூரிய வெப்பத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும், சரும புண்களை ஆற்றவும், தழும்புகளை மறைய செய்யவும் பூசணிக்காயை சாப்பிட்டு வந்தால் பயனடையலாம். உடல் எடையை குறைக்க பூசணிக்காயை சாப்பிடலாம்.உடலில் நீர்ச்சத்து மிகவும் முக்கியம் என்பதால், எந்த வயதினரும் பூசணிக்காயை சமைத்து சாப்பிடலாம். இதன் மூலம் நீரின் அளவினை சமநிலையில் வைத்துக்கொள்ள முடியும்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது