மதுக்கூர் அரசு பள்ளி மாணவியின் சாதனை ! குவியும் பாராட்டுகள் !

0



மதுக்கூரில் பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஜான்சிராணி என்பவர் குளிர்சாதனப்பெட்டி போன்று மின்சாரம் இல்லாமல் உணவை இயற்கையாக பதப்படுத்தி பாதுகாக்கும் முறையினை புத்தாக்க ஆய்வு செய்து உள்ளார்.திருச்சியில் மாநில அளவில் நடைபெற்ற கண்காட்சியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.மேலும் வரும் 5ஆம் தேதி டில்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாணவியின் இந்த முயற்சியினை கடந்த 22/09/2014 தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திரு சுப்பையன்,முதன்மை கல்வி அலுவலர் திரு தமிழரசு,மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் போன்றோர் வாழ்த்தியும்,பாராட்டினார்கள் .


மாணவிக்கு பரிசு வழங்கிய மதுக்கூர் தமுமுக நிர்வாகிகள்  :

மாணவியின் இந்த முயற்சியினை பாராட்டும் வகையில் மதுக்கூர் தமுமுக மாணவரணி சார்பாகவும்,மனிதநேய மக்கள் கட்சியின் மாணவர் இந்தியா சார்பாகவும் மாணவி ஜான்சிராணிக்கு வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்து பரிசு வழங்கி கெளரவித்தார்கள்.இந்நிகழ்ச்சியில் நகர மாணவர் அணி செயலாளர் சகோதரர் முகம்மது அஸாருதீன் ,மாணவர் இந்தியா நகர துணைச்செயலாளர் முகம்மது மர்சுக்,தமுமுக நகர தலைவர் ஜபருல்லா,தமுமுக நகர செயலாளர் பவாஸ்,அமீரக மதுக்கூர் பொறுப்பாளர் சகோதரர் நிஜாமுதீன்,மமக பேரூராட்சி உறுப்பினர் கபார். ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மாணவியின் இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் பெருமக்களையும்,பள்ளியின் தலைமையாசிரியை திருமதி செல்வகுமாரி ஆகியோரையும் தமுமுக நிர்வாகிகள் பாராட்டினார்கள்.









Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)