காலியாக உள்ள புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு SDPI கட்சியின் சார்பில் சம்சுன் மஹரிபா போட்டியிட முடிவு செய்தார்.
இதையடுத்து தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் Z. முகம்மது இலியாஸ், புதுப்பட்டினம் ஜமாஅத் தலைவர் அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து மாற்று வேட்பாளர் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழ் ஊராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
இதனை அடுத்து இன்று காலை 11.00 மணி அளவில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏற்பு நிகழ்ச்சி புதுப்பட்டினம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது .இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் Z. முகம்மது இலியாஸ்,புதுப்பட்டினம் ஜமாஅத்தார்கள் ,SDPI கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
Advertisement







1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது