அவரவர் சூழ்நிலை காரணமாக லட்சக்கணக்கான இந்தியர்கள் தங்கள் குடும்பங்களை விட்டு பிரிந்து வெளிநாடுகளில் பணியாற்றி வருகிறார்கள், இந்நிலையில் வெளிநாடுகளில் பணியாற்றுபவர்களில் தங்கள் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில், இந்தியர்களே முதலிடத்தை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து சொந்த நாட்டிற்கு பணம் உலகின் பல்வேறு நாடுகளின் மக்களை பின் தள்ளிய இந்திய மக்கள் அதிகளவில் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவிற்கு அனுப்புகின்றனர் என உலக வங்கி நிறுவனத்தின் தலைமை துணைத் தலைவர் மற்றும் தலைமை பொருளாதார நிபுணர் கவுசிக் பாசு கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, வெளிநாடுகளிலிருக்கும் அவரவர் நாட்டு மக்களால் நாடுகளுக்கு கிடைக்கும் வருமானம் டாலர்களில் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியா - 7,100 கோடி, சீனா - 6,400, பிலிப்பைன்ஸ் - 2,800, மெக்சிகோ - 2,400, நைஜீரியா - 2,100, எகிப்து - 1,800, பாகிஸ்தான் - 1,700, வங்கதேசம் - 1,500, வியட்நாம் - 1,100, உக்ரைன் - 900. இந்த வருமானம் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும், இத்தகைய வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது