காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் சுட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் எஸ்.பி.பட்டினம் சிறப்பு எஸ்.ஐ., தலைமை காவலர்கள் உட்பட 6 பேர் ஆயுத படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் கடந்த 15 ம் தேதி காவல் நிலையத்தில் விசாரணை கைதி சையது முகமது என்பவர் அங்கு பணியில் இருந்த எஸ்.ஐ. காளிதாசால் சுட்டு கொல்லப்பட்டார். அது தொடர்பாக நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி வேலுச்சாமி விசாரணை மேற்கொண்டுள்ளார்.
நேற்று எஸ்.பி.பட்டினம் காவல்நிலையத்தில் அவர் நேரில் ஆய்வு நடத்தினார். இந்நிலையில், அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு எஸ்.ஐ. பரமசிவம், தலைமை காவலர்கள் தனபால், ஐய்யப்பன், துரைக்கண்ணு மற்றும் இளைஞர் காவல்படையை சேர்ந்த மகாலிங்கம், ஜான் ரவி ஆகிய ஆறு பேரையும் ராமநாதபுரம் ஆயுத படைக்கு அதிரடியாக மாற்றம் செய்து ராமநாதபுரம் எஸ்.பி. மயில்வாகணன் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவுப்படி சுட்டுக் கொல்லப்பட்ட சையது முகமதுவின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது