இஞ்சினியரிங் படிச்சவங்களோட உண்மையான நிலைமை !

0

ஒரு காலத்தில் இஞ்சினியரிங் படிப்பு கொடிகட்டி பறந்திருந்தாலும், இன்று இஞ்சினியரிங் படித்தவர்களின் நிலைமை கொடூரமாக உள்ளது, காரணம் வேலை வாய்ப்பின்மை, பெற்றோர்கள் கஷ்டப்பட்டு கடன் வாங்கி படிக்க வைக்கப்பட்ட இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பின்றி வீட்டில் இருக்கின்றனர் ஒரு சிலரோ தாங்கள் படிப்புகேற்ற வேலை செய்யாமல் வேறு வேலையை தேடி செல்கின்றனர், எனவே இவர்களது கொடுமையை சொல்லி மாளாது. 

எலக்ட்ரீசியன், பிளம்பர், கொத்தனார் மற்றும் பல கூலி வேலைகளுக்கு செல்லும் நண்பர்கள் சம்பாதிக்கும் அளவு கூட தற்போது freshers ஆக உள்ள லட்ச லட்சமாக செலவு செய்து படிக்க வைக்கப்பட்ட எஞ்சினியர்கள் சம்பாதிப்பது இல்லை, இவர்களது சம்பளம் ஒரு வருட வரை 3,500 ரூபாயாகவே உள்ளது. இதற்கு காரணம் அனுபவம் இல்லாததும், நிறைய பேர் இஞ்சினியரிங் படிப்பை தேர்வு செய்ததுமே ஆகும். 

இன்னொரு முக்கியமான காரணம் அனைத்து பிரிவுகளில் அதாவது ECE EEE MECH போன்றவர்களும் IT துறையை தேர்ந்தெடுப்பதால் வேலை வாய்ப்பு குறைவாகி விடுகிறது. இன்னும் சொல்லபோனால், காலேஜ்களை சந்தை போல் லாபம் பார்க்க வெறும் நான்கு சுவர்களை கட்டி, 4 வருடம் மாணவர்களின் வாழ்க்கையில் விளகேற்ற வேண்டிய கல்லூரிகள், நானும் காலேஜ் வெச்சிருக்கேன் வந்து படிங்கன்னு நாசம் செய்யும் கல்லூரிகளும் இதற்கு முக்கிய காரணம். (நான் நல்ல கல்லூரிகளை பற்றி இங்கு குறிப்பிடவில்லை). சொல்லி தரவேண்டியதை சொல்லி தந்தாள் ஏன் மாணவர்கள் வேலை இன்றி தவிக்க வேண்டும், வேலை இன்றி தவிப்பதில் மற்றொரு காரணம் (knowledge குறைவு) நம் மாணவர்களிடமும் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். சில பேர் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் படித்து விடுகிறார்கள்.சில பேர் பெற்றோர்களின் கட்டாயத்தால்  படிக்கிறார்கள் .இதில் அந்த மாணவன் வேண்டா வேர்ப்பாக படிப்பதால் அந்த மாணவனின் வாழ்கை திசை மாறி போய்கிறது. இன்னொரு கொடூரமான விஷயம் பேஷன் டெக்னாலஜி படித்தவர்கலெல்லாம் இப்போது infosys, cts நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.

ஆனால் நண்பர்களே! லட்சலட்சமாக பணபோட்டு நல்ல படிப்பு படித்து விட்டு வேலை இல்லாமல் வீட்டில் இருப்பவர்கள் கஷ்டத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)