அதிரை இமாம் ஷாபி பழைய பள்ளி வளாகம் அருகே மக்தூம் பள்ளிவாசல் எதிரே அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் வந்து குப்பை கொட்டுகின்றனர்.
இங்கு கொட்டப்படும் குப்பைகள் பல நாட்களாக அதிரை பேரூராட்சி துப்பரவு ஊழியர்களால் அள்ளப்படுவதில்லை. இங்கு மக்தூம் பள்ளிவாசல், இமாம் ஷாபி பள்ளி, அல்-ஷனா நர்சரி பள்ளி உள்ளன. இப்பள்ளிகளில் ஏராளமான சிறுவர்கள் படித்து வருகின்றனர். இதனால் எந்நேரமும் மக்கள் அதிகளவில் கூடும் இடமாக இது உள்ளது.
ஆனால் இப்பகுதியில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள் அதிக காற்று வீசும் போது பள்ளிகளுக்கும் மக்தூம் பள்ளிவாசலுக்குள்ளும் பறந்து செல்கின்றன. இதனால் பள்ளி சிறுவர்களுக்கும் பள்ளிவாசலுக்கு தொழ வருபவர்களுக்கும் கொடிய நோய் பரவும் அபாயம் உள்ளது.
அனால் இதை கண்டும் காணாமல் பல நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குப்பைகள் அள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இப்பகுதியில் ஒரு சிமெண்ட் குப்பை தொட்டி கட்டித்தர வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இது போல் அதிரையில் ஒவ்வொரு தெருவிற்க்கு ஒரு குப்பை மேடு உள்ளது. இங்கும் குப்பைகள் நேரத்திற்க்கு அள்ளப்படுவது கிடையாது.
பள்ளி சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் சுகாதாரம் கருதி இப்பகுதியில் குப்பைகள் விரைந்து அள்ளப்படுமா? இப்பகுதி மக்களின் கோரிக்கையை எற்று இப்பகுதியில் சிமெண்ட் குப்பை தொட்டி கட்டித் தரப்படுமா? பொதுமக்களின் கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்புக்கு அதிரை பேரூராட்சி செவி சாய்க்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது