அதிரையில் இந்திய தேசிய லீக் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

0

அதிரையில் இன்று மாலை இந்திய தேசிய லீக் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் புதிய நிர்வாகிகள் தேர்ந்துதெடுப்பு  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாநில பொருளாளர் மதுக்கூர் மைதீன் தலைமை வகித்தார். இதில் தஞ்சை தெற்கு மாவட்டம் மற்றும் மல்லிபட்டினம் கிளை ஆகிய பகுதிகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிர்வாகிகளின் விவரங்கள் :

தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் :

தலைவர் : பாவா மைதீன்,
துணை தலைவர் : ரியாஸ் அஹமது,
செயலாளர் : ஜஹபர் சாதிக்,
பொருளாளர் : நிஜாமுதீன்,
பழனி பாபா பாசறை : சேக்,
தொண்டர் அணி :பாஷித்,
இளைஞர் அணி : அப்துல் அஜீஸ்,
மாணவர் அணி :ஆசிர் முஹம்மது.

மல்லிப்பட்டினம்  கிளை புதிய நிர்வாகிகள் :

தலைவர் : ரஹ்மத்துல்லா,
துணை தலைவர் : சேக் அலாவுதீன்,
செயலாளர் : பைசல்,
இணை செயலாளர் : சுபஹான்,
பொருளாளர் : ஆசாத்,

இந்த கூட்டத்தில் எஸ்.பி பட்டினம் காவல் நிலைய படுகொலையில் உயிர் இழந்த செய்யது முஹம்மத்  குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் , சுற்றுக்கொன்ற காவல்துறை உதவி ஆய்வாளர் காளிதாஸை கொலை வழக்கில் கைது செய்யப்படவும், கோவை சிறையில் அல்- உம்மா இயக்க தலைவர் பாஷா அவர்களை  தனி சிறையில் வைத்து சித்ரவதை செய்த கோவை சிறை துணை கண்கானிப்பாளர் செந்தில் குமாரை பணி நீக்கம் செய்யவும், அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு,போன்றவைகளை சீர் செய்யவும், பட்டுக்கோட்டை பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான வக்ஃபு சொத்தை பாதுகாக்கவும், இழந்த சொத்தை மீட்க போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் பல இளைஞர்கள் இந்திய தேசிய கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

கூடிய விரைவில் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில பொருளாளர் மதுக்கூர் மைதீன் அவர்கள் அளித்த பேட்டி வெளியிடப்படும் .  

தகவல் :ஜஹபர் சாதிக் (ராஜா)








Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)