
உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் புனித நகரான... அல்லாஹ்வுடைய அபய பூமியும், உலக முஸ்லிம்களின் புனிதபூமியுமான மெக்காவிலே ஹஜ் செய்வதற்கு வந்த ஹாஜிகளுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று மலர்கள் இன்று பிறந்துள்ளது. புனித பூமியில் பிறந்த இம்மூன்று மலர்களின் மீதும், பெற்றோர்களின் மீதும் எல்லாம் வல்ல இறைவன் ஈருலகிலும் நல் அருள் புரிவானாக.
மேலும் இறுதி கடமை ஹஜ்ஜை நிறைவேற்றி கொண்டிருந்த நிலையிலேயே பத்து பெண்கள் தங்களது வாரிசுகளை பெற்று எடுத்தனர்!!!!
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல இலட்சம் பெண்கள் உட்பட 25 இலட்சம் புனித பயணிகள் மக்காவில் குவிந்திருந்தனர்
இவர்களில் நிறைமாத கர்பணியாக இருந்த பத்து பெண்கள் தங்களது இறுதி கடமை ஹஜ்ஜை நிறைவேற்றி கொண்டிருக்கும் போதே தங்களது வாரிசுகளை ஈன்று எடுத்தனர்
ஜோர்டானை சார்ந்த ஹாஜா என்ற 23 வயது பெண்ணும் அவர்களில் ஒருவர் மற்றொருவர் ஆப்கானிஸ்தானை சார்ந்தவதர் எஞ்சியவர்கள் பல்வேறு நாடுகளை சார்ந்தவர்கள்
இவர்களுக்கு மக்காவில் உள்ள பைஸல் மருத்தவமனை மிகசிறந்த சிகிட்சைகளை வழங்கி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து கொடுத்தது
புனித மண்ணில் இறுதி கடமை நடைபெறும் நேரத்தில் அந்த மண்ணிலேயே அந்த கடமையை நிறைவேற்றி கொண்டிருந்த தாய்மார்கள் பெற்றெடுத்திருக்கும் இந்த குழந்தை செல்வங்கள் உண்மையிலேயே பாக்கியம் நிறைந்தவர்கள்
அவர்கள் இந்த மார்கத்திர்கு பல் வேறு விதங்களில் பலன் தரும் நல்லவர்களான வளர இறைவனிடம் நாம் பிரார்த்திப்போம்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது