வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடர்பாக கலெக்டர் சுப்பையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
பருவ மழை வரும் டிசம்பர் மாதம் வரை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தின் பேரிடர் மேலா ண்மைத் திட்ட கையேடு தயார் செய்யப்பட்டு அனைத்து துறை அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் இடர்பாடுகளை சமாளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் மழை வெள்ள கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்கலாம். கடலோர பகுதி பாதிப்புகளை 1093 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். இலவச தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் அனைத்து பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.
வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்க தேவையான மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. நுகர்பொருள் வாணிப கழகத்தால் அரிசி உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் போதுமான அளவு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
-dinakaran
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது