FLASH NEWS: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்தது !

0

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்  தண்டனை விதிக்கப்பட்டதை நிறுத்தி வைக்கவும், ஜாமீன் வழங்கக் கோரியும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உட்பட 4 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதிகள் மதன் பி லோகுர், ஏ.கே. சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு, ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.

ஜாமீன் கிடைத்ததை அடுத்து  அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேர் பெங்களூரு பயணம் சி்றையில் இருந்து இன்று அல்லது நாளை வெளியே வருவார் ஜெயலலிதா .

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)