துபாயில் $3200 கோடி டாலர் செலவில் புதிய பிரம்மாண்டமான விமான நிலையம்!

0
உலகின் மிகவும் பரபரப்பான இரண்டாவது விமான நிலையமாக துபாய் சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகின்றது.

இந்த பெருமை மட்டும் போதாது என்று தீர்மானித்த துபாய் அரசு, இந்த விமான நிலையத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ’துபாய் வேர்ல்ட் சென்ட்ரல்’ பகுதியில் மற்றோரு சர்வதேச விமான நிலையத்தை புதிதாக கட்ட ஏற்பாடு செய்து வருகின்றது.

32 பில்லியன் (3200 கோடி) அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்படும் இந்த விமான நிலையத்தை சுமார் நான்கரை கிலோ மீட்டர் நீளமுள்ள 5 ஓடுபாதைகளுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டு வாக்கில் 120 மில்லியன் பயணிகளையும், 12 மில்லியன் டன் சரக்குகளையும் கையாளும் திறன் கொண்டதாகவும், சுமார் 200 விமானங்களை ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்கும் வகையிலும் உருவாகவுள்ள இந்த புதிய விமான நிலையம், உலகின் மிகப் பெரியதும், அதிநவீன வசதிகள் கொண்டதாகவும் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதுள்ள சர்வதேச விமான நிலையத்தை 7.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் விரிவுப்படுத்தும் பணிகளும் விரைவில் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Courtesy: Maalaimalar
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)