அதிரை மீனவரின் தலைமையில் 5 மாவட்டங்களில் தொடர் உண்ணாவிரதம்!

Irshad Bin Jahaber Ali
0


தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவ சங்க தலைவர் சு.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:–

இலங்கை உயர் நீதிமன்றம் ராமேஸ்வரம் மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.

இவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக முதல்அமைச்சர் .பன்னீர்செல்வம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் ஆகியோரை மீனவ அமைப்புகள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தின.

இதையடுத்து அதிராம்பட்டினம் செல்லியம்மன் கோவிலில் நாட்டுப்படகு மீனவசங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் இருக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். கூட்டத்தில் துணைத்தலைவர் நாகேந்திரன், செயலாளர் சீனிகுப்பு, வீரையன், முருகன், அப்பாச்சாமி, ஜீவேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் அந்தந்த பகுதியில் தொடர் உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்துள்ளனர்.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)