
பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு பாஸ்போர்ட் மேளா வரும் 8ம் தேதி திருச்சியில் நடக்கிறது.
இதுகுறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்களுக்காக (16 வயதுக்கு மேல்) வரும் 8ம் தேதி பாஸ்போர்ட் மேளா திருச்சி சாஸ்திரி ரோட்டில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகத்தில் மட்டும் நடக்கிறது.
இதில் திருச்சி, கரூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டத்தை சேர்ந்த 16 வயது பூர்த்தியான 10ம் வகுப்பு மாணவர்கள் நேர்முகத்தேர்வு போல வந்து பங்கேற்கலாம். காலை 9 மணி முதல் 11 மணி வரை டோக்கன் வழங்கப்படும்.
18 வயதுக்குட்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் தாங்கள் ஆன் லைன் மூலம் பதிவு செய்த ஏஆர்என் எண் அச்சு நகல், 26.01.1989க்கு பின் பிறந்தவர்கள் பிறந்த சான்று, முகவரி சான்று, 10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்று, கல்லூரி சான்று, மாணவர் ஐடி கார்டு ஆகியவை தங்கள் மனுவுடன் இணைத்து வழங்க வேண்டும். மைனர் விண்ணப்பதாரர்கள் தங்கள் பெற்றோருடன் வரவேண்டும்.
போலீஸ் விசாரணை முடிந்த பின் பாஸ்போர்ட் வழங்கப்படும். ரூ.1,500 கட்டணம் செலுத்த வேண் டும். மேலும் விவரங்களுக்கு 0431&2707203, 2707404, 2700699 என்ற போன் எண் அல்லது 18002581800 என்ற டோல்ப்ரீ எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது