சகோதரர் ஆளூர் ஷாநவாஸ் இயக்கிய காயிதே மில்லத் ஆவணப்பட இறுதிக்கட்ட படத்தொகுப்பு(Editing Work)அல்லாஹ்வின் நாட்டத்தால் அருமை சகோதரர் ஷாநவாஸ் மூலம் எனக்கு தந்தான் அல்ஹம்துலில்லாஹ். இந்த ஆவணப்படத்தை இயக்கிய சகோதரருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! இவர் இப்படத்தை இயக்காவிட்டால் நிச்சயம் காயிதே மில்லத் யார் அவர் என்ன செய்தார் இந்த சமுதாய முன்னேற்றத்திற்கு என்பது எல்லாம் அவரோடே சென்றிருக்கும்.
நாமெல்லாம் காயிதே மில்லத் முஸ்லிம் லீக் தலைவர் என்றுதான் எண்ணி இருப்போம். முஸ்லிம் லீக் தலைவர் மட்டும்தானா? இல்லை அவர் அதையும் தாண்டி நிற்கிறார் என்று இப்படம் பேசுகிறது.உதாரணமாக புனித குரானை தமிழில் மொழியாக்கம் செய்வதற்கு தூண்டியவர் காயிதே மில்லத் என்பதையும் அரசியல் கூட்டணி முடியில் நாம் எடுப்பதை விட மக்களுடன் தினமும் பேசும் ஊடகங்களை இயக்கும் பத்திரிக்கையாளருடன் ஆலோசனை செய்துவிட்டு கூட்டணி முடிவெடுப்பார் என்பதையும் இப்படம் பேசுகிறது.பாருங்கள் எப்படிப்பட்ட தொலைநோக்கு பார்வை.
இதுமட்டும் அல்ல ஊடகத்தில் மிக பெரிய ஜாம்பவனாக இருக்கும் சினிமா என்ற கருவியிலும் நாம் நமது நியாயங்களை சொல்லமுடியும் என்பதற்காக அன்றே அரசுக்கு திரைப்பட கல்லூரி துவங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார் என்பதையும் நமக்கு தெரியாத இன்னும் பல விஷையங்களை இந்த ஆவணப்படம் பேசுகிறது....பெரியார்,ராஜா
ஆக்கம்:EDITOR ALAUDEEN
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது