இப்போட்டியில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் சார்பில் அதிராம்பட்டினம் மற்றும் பட்டுக்கோட்டை பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தங்க பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர்.இதில் அதிராம்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாண விகள் 14 வயதுடையோருக்கான 55 கிலோ எடைப்பிரிவில் அம்சவள்ளி, 46 கிலோ எடைப்பிரிவில் பவித்ரா ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்.
46 கிலோ எடைப்பிரிவில் ராஜேஸ்வரி, 37 கிலோ எடைப்பிரிவில் காயத்ரி ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளான மெர்லின்சுனித்தா 37 கிலோ எடைப்பிரிவிலும், யோகப்பிரியா 50 கிலோ எடைப்பிரிவிலும், ஸ்ரீநிதி 53 கிலோ எடைப்பிரிவிலும் வெள்ளிப்பதக்கங்கள் பெற்றனர். 30 கிலோ எடைப்பிரிவில் அஜிட்டா வெண்கலப்பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர்.
இப்போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவிகள் ஜனவரி 2015ல் தூத்துக்குடியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை நகராட்சித் தலைவர் ஜவஹர்பாபு, தமிழ்நாடு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெய்சங்கர், நகரா ட்சி கவுன்சிலர்கள் மற்றும் பலர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.
courtesy:dinakaran
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது