குளிர் மழையில் குளத்தில் குளித்து குதூகளித்த அதிரை சிறுவர்கள்!

0
 

அதிரையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெரும்பாலான குளங்கள் ஆற்று நீராலும் தொடர்ந்து பெய்த வட கிழக்கு பருவ மழையின் காரணமாகவும் நிரம்பி வழிந்தன. இதனை அடுத்து தண்ணீர் நிரம்பியுள்ளது குளங்களில் சிறுவர்கள், இளைஞர்கள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

வண்டிப்பேட்டையில் உள்ள அதிரையின் முக்கியமான குளங்களுள் ஒன்றான ஆலடிக் குளமும் பல ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு நிரம்பியுள்ளது. இந்த குளத்திலும் நாளொன்றுக்கு பலர் வந்து மகிழ்ச்சியுடன் நீராடி செல்கின்றனர்.

இன்று அதிரையில் பெய்த திடீர் மழையால் நமதூரில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை அடுத்து ஆலடிக்குளத்தில் சிறுவர்கள் பலர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது உற்ச்சாகமாக ஆலடிக் குளத்தில் நீராடினர்.

குளத்தில் நீராடுவதால் உடலுக்கும் மனதுக்கும் பல நண்மைகள் உண்டு என்றாலும் பாதுகாப்பான முறையில் ஆழமான ஆபத்தான பகுதிகளுக்கு செல்லாமல் எல்லைக்குள் நீராடினால் அனைவருக்கும் மகிழ்ச்சிதான்
.

 


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)