தஞ்சையில் நாளை மாவட்ட அளவிலான கடற்கரை குழு விளையாட்டு போட்டிகள் நாளை நடக்கிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் நட ப்பு ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கடற்கரை குழு விளையாட்டு போட்டிகள் பட்டுக்கோட்டை தாலுகா புதுப்பட்டினம் வெளிவயலில் நாளை நடக்கிறது. கடற்கரை வாலிபால், கடற்கரை கபடி, கடற்கரை கால்பந்து போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பில்லை. ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கலாம்.
போட்டிகள் அனைத்தும் அன்றைய தினம் காலை 9 மணிக்கு துவங்கும். தாமதமாக வரும் அணியினர் போட்டியில் பங்கேற்க முடியாது. மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடத்தை பெறும் அணியினர் மாநில போட்டியில் பங்கு கொள்வர்.
மாநில அளவிலான போட்டியில் கடற்கரை கால்பந்து விளையாட்டில் ஆண்கள் 5 பேர், பெண்கள் 5 பேர். கைப்பந்து போட்டியில் ஆண்கள் 2 பேர், பெண்கள் 2 பேர். கபடி போட்டியில் ஆண்கள் 6 பேர், பெண்கள் 6 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சீருடை வழங்கி அழைத்து செல்லப்படுவர். மாவட்ட அளவில் முதலிடம் பெறும் அணி யில் உள்ள அனைவருக்கும் தலா ரூ.500, இரண்டாம் இடம் பெறுவோருக்கு தலா ரூ.350, மூன்றாம் இடம் பெறுவோருக்கு தலா ரூ.200 பரிசு வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட விளையாட்டு அலுவலர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
-dinakaran
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது