அதிரை கடற்கரை தெரு மற்றும் காதிர் முகைதீன் கல்லூரியில் ஆய்வு செய்த தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர்!

0
தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் தமிழ் மகன் உசேன் அவர்கள் இன்று காலை அதிரை ஜாவியாவில் நடைபெற்று வரும் புஹாரி ஷரீப் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார். இதனை தொடர்ந்து அதிரை கடற்கரை தெரு தர்காவில் ஆய்வு மேற்க்கொண்டார். 

சில தினங்களுக்கு முன்பாக அதிரை துனை பேரூராட்சி தலைவர் பிச்சை, அதிரை அதிமுக துணை செயலாளர் தமீம் மற்றும் 8வது வார்டு கவுன்சிலர் சேனா மூனா ஹாஜா முஹைதீன் அவர்கள் அமைச்சரிடம் கடற்கரை தெருவில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து எடுத்துரைத்து அப்பகுதிக்கு தண்ணீர் தொட்டி அமைத்து தருமாறு  கோரிக்கை வைத்தனர். இதையும் தமிழ் மகன் உசேன் அவர்கள் ஆய்வு செய்து விரைவில் இதற்கு முழு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்த ஆய்வின் போது முஹல்லா தலைவர் P.L.அஹமது ஹாஜா, செயலாளர் M.L.A. ஹசன் மற்றும் முஹல்லாவாசிகள், ஜமாத்தார்கள் உடனிருந்தனர். 

இதனை தொடர்ந்து அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி சென்று அங்குள்ள கல்லூரி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். இந்த இரண்டு சந்திப்புகளின் போதும் அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, அதிரை அதிமுக துணை செயலாளர் தமீம் அதிரை அதிமுக வார்டு கவுண்சிலர்கள் சேனா மூனா ஹாஜா முஹைதீன், உதயகுமார் மற்றும் அதிரை அ..தி.மு.க முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் உடனிருந்தனர்.   














Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)