தஞ்சையில் திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Irshad Bin Jahaber Ali
0
                           
தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க. கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களை கேட்டு வருகிறார்.

இன்று அவர் தஞ்சை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கான கூட்டம் தஞ்சை புது ஆற்றங்கரையில் உள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அப்போது நிர்வாகிகளிடம் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்விக்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். தொழில் அதிபர்களிடமும் அவர் கருத்து கேட்டார். பின்னர் கட்சியின் பொது நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். இன்று மாலை பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

முன்னதாக நேற்று இரவு தஞ்சை வந்த மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்வம் தலைமை தாங்கினார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் நீலமேகம், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் எல். கணேசன், முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ். பழனி மாணிக்கம், முன்னாள் அமைச்சர்கள் கோ.சி. மணி, உபயத்துல்லா, காரல்மார்க்ஸ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சண். ராமநாதன், ஒரத்தநாடு ஒன்றிய முன்னாள் பொறுப்பாளரும், முன்னாள் ஒன்றிய தலைவருமான மு. காந்தி உள்பட பலர் மு.க. ஸ்டாலினுக்கு சால்வை கொடுத்து வரவேற்றனர். 
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)