
அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதியில் மின் கம்பம் ஒன்று ஆபத்தான நிலையில் உடைந்து விழுவது போல் இருந்து வருகிறது. இதனை அடுத்து அப்பகுதியினர் கடந்த 4 மாதங்களுக்கு முன் அளித்த புகாரின் அடிப்படையில் இப்பகுதிக்கு புதிதாக சிமெண்ட் மின் கம்பம் கொண்டுவரப்பட்டது.
இந்த மின்கம்பம் கொண்டுவரப்பட்டு 4 மாதங்களாகியும் பழைய கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் பொருத்தப்படவில்லை என்கின்றனர் அப்பகுதியினர். தற்பொழுது அந்த பழைய கம்பத்தின் நிலை மேலும் மோசமாகி எப்பொழுது வேண்டுமானாலும் விழும் இக்கட்டான நிலையில் உள்ளது.இது பற்றி அதிரை மின் வாரியத்துக்கு பல முறை தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள்.
மேலும் இந்த மின் கம்பத்தின் அடிவாரத்தில் குடிநீர் குழாய் ஒன்றும் உள்ளது. நாளொன்றுக்கு பெண்கள் பலர் இங்கு வந்து அச்சத்துடன் தண்ணீர் பிடித்து செல்லும் நிலை உள்ளது.
எனவே இப்பகுதி மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஹாஜா நகர் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட மின்கம்பத்தை உரிய இடத்தில் உடனே பொருத்துமாறு அப்பகுதி மக்களின் சார்பாக அதிரை பிறை சார்பாகவும் சம்பந்தப்பட்ட துறை நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.



தகவல்: அல் மஹ்ஷிப் (அதிரை ஹாஜா நகர்)
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது